
கூர்தீட்டிய மரத்தையே பதம் பார்க்கத் துணிந்து விட்ட சீமான் ஒரு பச்சையான மதிக் கேடன் என்று மலேசிய திராவிடர் கழக இடைக்காலத் தலைவர் சாமி. பாரதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
எதிரியைவிட துரோகி ஆபத்தானவர்கள் என்பதை காலம் பலமுறை தமிழ் இனத்திற்கு சுட்டி காட்டி இருக்கிறது. ஆனாலும் கடுங்கயமைத்தனமும் பொய்மையும் போக்கிரித்தனமும் நிறைந்த தெருவோர குழப்பவாதியைப் போல இன்னொருவரைவேறு எவரும் உலகின் எந்த மூலையிலும் காண வாய்ப்பு இல்லை.
தொடக்க காலத்தில் இந்த கயமை பேர்வழி, சுயமரியாதை-திராவிட இயக்க மேடைகளில் தன்னை முன்னிலைப்படுத்தி பெரியாரின் சிந்தனைகளையும் பெண்ணிய கொள்கையையும் மொத்தத்தில் தமிழிய மாண்பையும் உரக்க உரக்கப் பேசி கூவி கூவி ஓலமிட்டது இந்த இழிப்பிறவி.
இன்று மாற்றானின் கைக்கூலியாகி தமிழினத்தையும் தமிழ் மண்ணையும் காட்டிக் கொடுக்கும் விதமாக அப்பட்டமாக பொய் பேசி திரிகிறது இந்த கழிபிறவி.
பெண் கொள்ளி வைத்தால் உடல் வேகாதா என்றெல்லாம் மேடைகளில் முழங்கிய இதே சீமான், இத்தகைய புதுமை சிந்தனையையும் பெண்ணிய மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் என்று 15 ஆண்டுகளுக்கு முன்பு பேசிவிட்டு இன்று “தமிழ்நாடு பெரியார் மண் என்பதெல்லாம் மாயை”; பெரியாரே வெறும் மண்தான் என்று நெஞ்சார பொய் சொல்லி புறம்பேசித் திரியும் கயவன் சீமான் என்னும் கழிசடை, ஆரியத்தின் கைக்கூலி ஆகிவிட்டது.
தமிழினத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்துவிட்ட ஆரியத்தின் எடுபிடி ஆகி, வீசப்பட்ட எலும்புத்துண்டை கௌவித் தெரியும் தெருவோர விலங்காகத் திரியும் குணக்கேடன் சீமான், கறை படிந்த அச்சில் உருவான களங்கப் பிறவி.
தமிழ்நாட்டு அரசு இனியும் வாளாயிராது, இந்தக் கசடனை-அசடனைப் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தந்தால் ஓழிய இந்த கயமைப்பிறவி புரட்டுத்தனம் புரிவதில் இருந்து தயங்க போவதில்லை என்று மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த வாரம் சீமானுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனக் கூட்டத்தில் பேசினார் பாரதி.
மானமிகு நாக பஞ்சு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாரதி மேலும் முழங்கினார்.

தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள், உறவு முறை பாராமல் அனைத்து பெண்களையும் பெண்டாளலாம் என்று பெரியார் சொன்னதாக சொல்லி, தந்தை பெரியார்மீது களங்கத்தை ஏற்படுத்த முயல்கிறது இந்த பொய்ப்பிறவி. தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி எத்தகைய நலத்திட்டங்களை அறிவித்தாலும் அதில் குறை காண்பதிலேயே குறியாக இருக்கும் இந்த சீமான் வஞ்சகத்தின்- பொய்மைப் புரட்டின் மொத்த உருவமாக திரிகிறது; இதை மலேசிய திராவிட கழகத்தின் சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறோம். அதேவேளை தமிழக அரசு இந்த பிறவியை இப்படியே காலமெல்லாம் வீதியில் உலாவும்படி விட்டு வைக்கக் கூடாது.
தமிழினத்திற்கும் தமிழ் மொழிக்கும் கேடு விளைவிக்க கூடிய சீமான் என்னும் நச்சுப் பாம்பின் தலையில் இருந்து அதன் வஞ்சக விஷம் வெளியேறும்படி தமிழக அரசு உரிய வகையில் சட்டமுறைப்படி பதம் பார்க்க வேண்டும் என்று
கேட்டுக்கொள்வதாக சாமி பாரதி மேலும் பேசினார்.
சுயமரியாதை இயக்கத்துடன் ஒட்டி உறவாடி, அந்த உணர்வோடு வளர்ந்து விட்டு, இப்பொழுது சுயமரியாதை கொள்கைக்கு கேடு விளைவிக்க நினைக்கும் ஆரியத்துடன் கைகோத்துக்கொண்டு தமிழினத்திற்கும் மொழிக்கும் பாதகம் செய்ய துடிக்கும் சீமானை மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் மாந்த நேய திராவிடர் கழகத் தலைவருமான மானமிகு நாக பஞ்சு கருத்து தெரிவித்தார்.

என்னதான் முயன்றாலும் தமிழ்நாட்டில் ஆரியத்தால் திராவிட சித்தாந்தத்தையும் சுயமரியாதை கொள்கையையும் வீழ்த்த முடியாது; அதற்கேற்ற வக்கும் வகையும் அற்ற ஆரிய வட்டம், தன்னால் முடியாததை தமிழ் மண்ணில் பிறந்த ஒரு கருங்காலியின் துணை கொண்டு நிகழ்த்திட பார்க்கிறது.
தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் எதிராக அதை ஏவிவிட்டு, பின்னால் நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது மூன்று விழுக்காட்டு சூழ்ச்சிக் கூட்டம்.
அதற்கு விலைபோன இந்த கயமைப் பிறவி, ஆரியத்தின் பாதம் தாங்கி திரிவதுடன் தமிழையும் தமிழினத்தையும் சாதி வாரியாக பிரித்து குளிர் காயப் பார்க்கிறது. இது மிகமிக கண்டிக்கத்தக்கது. சீமானின் இடப்புறம் கொழும்பும் வலப்புறம் புது டில்லியும் இருப்பதால் அளவுக்கு அதிகமாக தமிழ் நிலத்தில் சலசலப்பு ஏற்படுத்தியும் திராவிட சித்தாந்தத்தை பழித்தும் இழித்தும் பேசி வருகிறார் சீமான.
இந்த நிலை காலம் உள்ள அளவும் நீடிக்காது. விரைவில் இதற்கு ஒரு நாள் முடிவுரை எழுதப்படும் என்று நெகிரி செம்பிலான் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்ட சுயமரியாதை சிந்தனையாளரும் மருத்துவருமான பாரி கருத்து தெரிவித்தார்.
ஆபிரகாம் பண்டிதர் உள்ளிட்ட திராவிட இயக்க சிந்தனையாளர்களை தமிழ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது பெரியார்தான்; இந்த உண்மை யாவும் தெரிந்திருந்தும் பெரியார்க்கு முன்பே திராவிடத்தை பேசிய தலைவர்கள் இருக்கிறார்கள் என்று சீமான் உண்மையை மறைத்து பேசுகிறார். சீமானுடைய நோக்கமேலலாம்ம் மனம் அறிந்து பெரியாருக்கும் திராவிட இயக்கத்துக்கும் சிறுமை சேர்ப்பது என்பதுதான். அதுதான் அவரின் ஒற்றை இலக்கு என்று பாரி தன் உரையில் மேலும் குறிப்பிட்டார

சீமான் பிராமணியத்துக்கு அடியோடு விலை போய் விட்டார். அவர், சொந்தக் கட்சியை வளர்க்க வேண்டும்; ஆட்சியில் அமர வேண்டும்; தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் சீமானுக்கு அடியோடு இல்லை. அவருக்கு வேண்டியதெல்லாம் நிதி ஆதாரம் ஒன்றுதான். பணம் எந்த திசையில் இருந்து வருகிறதோ அந்த திசையை நோக்கி மண்டியிடுவது மானமும் அறிவும் அற்ற இதுக்கு வாடிக்கை;
.சீமானைப் பற்றி நாம் அதிகம் அக்கறைப்ப்படவோ கலவரப்படவோ தேவையில்லை. இது அநேகமாக அணையப் போகிற விளக்கு. அதனால் அதிகமாக சுடர் விடுகிறது. எது எவ்வாறாக இருந்த பொழுதிலும் சீமானின் அத்தியாயம் ஏறக்குறைய நிறைவுக்கு வர இருக்கிறது இன்று பாரி மேலும் தன் உரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேராக் மாநில பெரியார் பாசறளற சார்பில் அதன் தலைவர் முனைவர் மணிமாறன் மிக எழுச்சியாகவும் சுருக்கமாகவும் பேசினார்
தந்தை பெரியாரின் சிந்தனைகளும் சுயமரியாதை உணர்வும் இந்த மலைநாட்டு தமிழர்தம் மனங்களில் ஆழமாக வேர் ஊன்றிவிட்ட அம்சமாகும்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இரண்டு முறை மலேசியாவிற்கு வந்திருக்கிறார் என்பது உண்மை; அதில் ஒரு முறை ரஷ்யாவிற்க்கு சென்றுவிட்டு தாயகத்திற்கு திரும்பும் வழியில் மலேசியாவிற்கு வந்திருக்கிறார்.
எது எப்படி இருந்த பொழுதிலும் தமிழர்கள் மிகுதியாக புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகளில் இலங்கைக்கு அடுத்து மலேசியாவில்தான் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றனர். இரண்டு முறை வந்துபோன மலேசியத்திலேயே திராவிட இயக்கம் இந்த அளவுக்கு எழுச்சியுடன் இருக்கிறது என்றால் தமிழர்களின் தாய் நிலமான தமிழ்நாட்டில் சொல்லத் தேவையில்லை.
எது எவ்வாறாக இருந்த பொழுதிலும் இன்றைய அரசியல் சூழலில் சீமான் தனக்கு எது தேவையோ அதை பேசட்டும் பெற்றுக்கொள்ளட்டும்; ஆனால் ஓர் இனத்தை-அந்த இனத்தின் மொழி சமூக பண்பாட்டை பார்ப்பனியத்துக்கு அடிமைப்படுத்தும் வகையில் ஒரு பிற்போக்குவாதியாக சீமான் செயல்படுவதை பேராக் மாநில பெரியார் பாசறை கடுகளவும் ஏற்கவில்லை; பாதை மாதிரி பயணிக்கும் சீமான் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனாலும் அவர் விரைவில் தடைக்கல்லை எதிர் கொண்டு தேங்கி நிற்கக்கூடும். அதுதான் அவருடைய புறம்போக்குத்தன பாதையின்
இறுதி நிலையாக இருக்கும்.
ஆனாலும் மலேசிய இந்தியர்கள் என்னாலும் குறிப்பாக சுயமரியாதை உணர்வு கொண்டவர்கள் தங்கள் பாதையில் என்னாலும் பயணிப்பர்; இந்த நிலை இன்னும் மேம்படும் என்று மணிமாறன் தெரிவித்தார்


