Thursday, April 16, 2026

ஜம்ரி வினோத்துடன் விவாதம் கிடையாது: டத்தோஸ்ரீ சரவணன் காலத்தால் எடுத்த மிகப் பொருத்தமான முடிவு

இந்து மதம் குறித்து தொடர்ந்து மூர்க்கத்தனமாக பேசிவரும் ஸம்ரி வினோத்துடன் விவாதம் செய்ய இருப்பதாக எடுத்த முடிவு, அரசத் தரப்பின் முடிவை மதித்தும் நாட்டின் நல்லிணக்கம் ஒற்றுமை ஒருமைப்பாடு கருதியும் சம்பரி வினோத்துடனான விவாதத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தாப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மு. சரவணன் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் இன்று கோலாலம்பூர் பிரிக் பீல்ட்ஸ் பகுதியில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பன்மொழி ஊடகத்தரிடம் பேசிய சரவணன் நாட்டில் நல்லிணக்கமும் அமைதியும்தான் முக்கியம் என்றார்.

தைப்பூச காவடி குறித்து இழிவாக கருத்துப் பதிவிட்ட ஸம்ரி வினோத்திற்கு விளக்கம் அளிப்பதன்பொருட்டே இந்த விவாதத்தை நிகழ்த்த விரும்பினேன்.

எது எவ்வாறாக இருந்தாலும் நாட்டில் நிலவ வேண்டிய நல்லிணக்கம், நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு மக்கள் பிரதிநிதி என்னும் அடிப்படையில் சமயம் சார்ந்த இத்தகைய விவாதத்தில் இருந்து விலகி கொள்வதாக சரவணன் மேலும் அறிவித்தார்.

மேல் விவரம் தொடரும்.. .

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை