
நாட்டின் பாரம்பரிய தலைநகரான கோலாலம்பூரில் தற்பொழுது பேசு பொருளாகியுள்ள அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் ஆலயம் தொடர்பாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் பொது ஒழுங்கிற்கு மிரட்டல் ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதன் தொடர்பில் ஸம்ரி வினோத் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் ரசாருடீன் உசேன் தெரிவித்தார்.
தற்பொழுது பாடாங் பெசார் காவல் நிலைய தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸம்ரி, நாளை காலையில் கங்கார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று உசேன் மேலும் தெரிவித்துள்ளார்.
பத்ரகாளியம்மன் ஆலயம் தொடர்பாகவும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் வகையிலும் கருத்து பதிவிட்டதற்காக தலைநகர் டாங் வாங்கி காவல் நிலையத்தில் ஸம்ரி வினோத்திற்கு எதிராக நேற்று புகார் செய்யப்பட்டது. மலேசியத் தகவல் பல்லூடக ஆணையம் சம்ரி வினோத்தின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவலை பாதுகாத்துள்ள அதேவேளை, அவருடைய கைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இணைய சேவையை தவறாக பயன்படுத்தியதற்காக தேசிய நிந்தனை சட்டத்தின்படியும் மலேசியத் தகவல் பல்லூடகச் சட்டம் பிரிவு 233-,இன்படியும் ஸம்ரி வினோத் காளிமுத்து மீது குற்றம் சுமத்தப்பட இருக்கிறது


