
மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் மாதாந்திர சொற்பொழிவு நாளை ஏப்ரல் திங்கள் 13ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பதரை மணியளவில் தொடங்குகிறது.
கோலாலம்பூர் துன் சம்பந்தன் மாளிகை தான்ஸ்ரீ கே ஆர் சோமா அரங்கில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில், தமிழிய ஆன்மீக நெறி சார்ந்த சைவ சமய விளக்கம் இடம்பெறும்.
இதில் முதல் சொற்பொழிவில், மலேசிய சைவ நற்பணி கழகத்தின் செயலாளர் சிவநேய செல்வி அகல்யா தர்மலிங்கம், பங்குனி உத்திரம் குறித்து விளக்கம் அளிக்க இருக்கிறார்.

தொடர்ந்து இந்த கழகத்தின் தலைவர் ‘திருமுறை செம்மல்’ முனைவர் தர்மலிங்கம் நடராஜன், அப்பர் தேவாரம் குறித்து விளக்க உரை ஆற்ற இருக்கிறார்.
தமிழர்தம் நெடிய ஆன்மிகப் பயணத்தில் ‘தமிழருக்கு தமிழும் சைவமும் இரு விழி’ யென ஆன்றோர் பெருமக்கள் சொல்வார்கள்; அத்தகைய பாங்கு வெளிப்பட இருக்கின்ற இந்த நிகழ்வில் சுற்று வட்டார தமிழ் அன்பர்களும் சிவ நேயர்களும் இதில் கலந்து விளக்கம் பெற்று இன்புறுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர் பகல் உணவுடன் இந்த நிகழ்ச்சி நிறைவு பெறும்.


