
ஏப்ரல் 14,(1891) இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள்.
எங்கே சமூகநீதி மறுக்கப்படுகிறதோ அங்கே ஜனநாயகம் சரியாக செயல்படாது என்று உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையின் குறியீடாக வாழ்ந்த பெருமகனார்.
ஒவ்வொரு நாடும் சொந்த மக்களின் சம உரிமையை மதித்து, அவர்களுக்கு சம வாய்ப்பை அளித்தால் சமூகநீதி நிலைநாட்டப்படும்.
அவ்வாறு சமூகநீதி நிலைநாட்டப்படும்போதுதான் அனைவரும் ஒரு சமுதாயம் என்ற கோட்பாட்டின்கீழ் ஒற்றுமையாக வாழ்வார்கள்.
வறுமை மற்றும் அடித்தட்டில் இருக்கிற மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்செல்ல சமூக நீதி பார்வை அவசியம்.
ஒடுக்கப்பட்ட மற்றும்
நிராகரிக்கப்பட்ட மக்கள், சமூக சமநிலை பெறுவதற்கான மிக முக்கிய முன்னெடுப்பு சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரம் ஆகும்.
அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே
கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த அந்த புரட்சியாளர் நினைவை போற்றுவோம்
கணேசன்
உரிமை
பகாங்


