Tuesday, April 21, 2026

ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: தொழில்நுட்பப் பூங்கா தரவு மையத்தை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாட்டு முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று 17-4-2025 செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,882 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சிஃபி நிறுவனம், சிப்காட்- சிறுசேரி தொழில்நுட்ப பூங்காவில் அமைந்துள்ள தரவு மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி பி ஆர் ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ், டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான த ராஜு வெஜேஸ்னா, செயல் இயக்குனர் விஜயகுமார், நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அரச உயர் அலுவலர்களும் இதில் கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை