Monday, April 20, 2026

பெரியவர் போப் பிரான்சிஸ் மரணம் !

"உலக அமைதிக்காக குரல் கொடுத்த உன்னதமானவரை இழந்துள்ளோம் !"

மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பெரியவர் போப் பிரான்சிஸ் அவர்கள், தனது 88 ஆம் வயதில் இன்று காலமாகியுள்ளார் .

கடந்த 12 ஆண்டு காலமாக உலக கத்தோலிக்கர்களின் உன்னத தலைவராகவும், அனைத்து தரப்பு மக்களின் அன்பிற்குரியவராகவும், அவர் தனது பணிகளை செய்து வந்தார்

பலஸ்தினத்தின் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத யுத்தத்துக்கு எதிராக, தன்னுடைய கடும் கண்டனங்களையும், ஆழ்ந்த வேதனைகளையும் தெரிவித்து கலங்கிய மனித நேயர்.

ரஷ்ய -உக்ரைன் போரை நிறுத்துவதற்காக குரல் கொடுத்தவர் .

உலகில் போர்களால் பாதிக்கப்படும் மக்களுக்காகவும், வறுமையால் பாதிக்கப்படும் மக்களுக்காகவும், தனது அன்பின் குரலை வெளிப்படுத்தியவர் .

தென் அமெரிக்காவிலிருந்து இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் ஆளுமையாக இருந்தார் .

கடைசியாக கடந்த ஈஸ்டர் தினத்தன்று அவர் உரையாற்றினார்.

அதுதான் தான் அவரது கடைசி நிகழ்வாக அமைந்து விட்டது.

உலக அமைதிக்காக குரல் கொடுத்த அன்னாரின் மரணம் மிகவும் துயரம் அளிக்கிறது.

அன்னாரை இழந்து தவிக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கும், மதங்களை தாண்டி அவரை நேசித்த அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த ஆறுதலை, இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

இவண்,

மு. .தமிமுன் அன்சாரி,
தலைவர்,
மனிதநேய ஜனநாயக கட்சி

  1. 4.25

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை