Saturday, June 6, 2026

பன்னாட்டு சமையல் போட்டியில் மலேசியாவுக்கு பெருமை சேர்த்த ‘செஃப்’ யுவன்!

தாய்லாந்தின் பாங்காக்கில் மே 26 முதல் 30 வரை நடைபெற்ற Thailand Ultimate Chef Challenge 2026 பன்னாட்டு சமையல் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்த செஃப் யுவன், செஃப் ஷஃபிக், செஃப் லியோ ஆகியோருடன் இணைந்து Champion Cup வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கி, முழுமையான ஆதரவும் ஊக்கமும் அளித்த Lotus’s Malaysia நிறுவனத்திற்கும் செஃப் யுவன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தனிநபர் பிரிவுகளிலும் சிறப்பாகப் பங்கேற்ற செஃப் யுவன், மேலும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை (Bronze Medals) வென்று தன் திறமையை சர்வதேச அரங்கில் மீண்டும் நிரூபித்துள்ளார்.

செஃப் யுவனின் முந்தைய சாதனைகள்:

1 -Champion Cup
1 -Second Runner-Up பட்டம்
3 -தங்கப் பதக்கங்கள்
7 -வெள்ளிப் பதக்கங்கள்
5 -வெண்கலப் பதக்கங்கள்

போட்டிக்குப் பிறகு பேசிய செஃப் யுவன், இந்திய இளைஞர்கள் அதிக அளவில் சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் இணைவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
“சமையல் துறை என்பது ஒரு வேலை மட்டுமல்ல; அது ஒரு சிறந்த தொழில் வாய்ப்பும்கூட;

தங்கும் விடுதிகள், கப்பல் சுற்றுலா (Cruise), விமான சேவைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறும் வாய்ப்புகளை இது வழங்குகிறது. இந்திய இளைஞர்கள் இந்தத் துறையில் அதிகமாக ஈடுபட்டால், தனிநபர் முன்னேற்றத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் அடைய முடியும்.”

மேலும், சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் ஆர்வமுள்ள இந்திய இளைஞர்கள் தொழில் வழிகாட்டல், கல்வி வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான மேற்தகவல்களுக்கு தன்னை தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், உணவக உரிமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்களின் வணிக வளர்ச்சி, மெனு மேம்பாடு, சமையலறை செயல்திறன், பணியாளர் பயிற்சி மற்றும் உணவக மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளுக்காகவும் தன்னை(012-4652329) அணுகலாம் எனவும் அவர் கூறினார்.

செஃப் யுவனின் இந்த சர்வதேச வெற்றி, மலேசிய சமையல் கலைஞர்களின் திறமையை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியதுடன், எதிர்கால தலைமுறையினருக்கும் ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது. இது திறன் அடிப்படையிலான தொழில்களின் முக்கியத்துவத்தையும், உலகளவில் மலேசியர்களின் சாதனைப் பயணத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

மேலும், இந்திய சமூகத்தைச் சேர்ந்த குறிப்பாக B40 குடும்பப் பின்னணியிலிருந்து வரும் இளைஞர்கள், சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் நிலையான வருமானம், தொழில் முன்னேற்றம் மற்றும் சர்வதேச வேலைவாய்ப்புகளைப் பெற்று M40 பொருளாதார நிலைக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று செஃப் யுவன் வலியுறுத்தினார்.

“சமையல் துறை என்பது திறமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகளாவிய தொழில். சரியான பயிற்சி, அர்ப்பணிப்பு மற்றும் அனுபவத்துடன், இளைஞர்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை