Wednesday, April 22, 2026

பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் தேர்தல்: பிரின்ஸ் ஜோனதன் வேலா வெற்றி!

கோலாலம்பூர் ஏப்ரல் 21-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இளம் வேட்பாளர் பிரின்ஸ் ஜோனதன் வேலா வெற்றி பெற்றார்.

உதவித் தலைவர் பதவிக்கு மொத்தம் ஐந்து பேர் போட்டியிட்டனர். இதில் பிரின்ஸ் ஜோனதன் வேலா 766 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டார் துன் ரசாக் மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்கி வரும் இவரின் வெற்றி எதிர்பார்த்த ஒன்று என்றாலும் ஐந்து முனை போட்டியில் வாகை சூடியது மிகவும் பாராட்டுக்குரியது.

பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி தலைவர் தேர்தலில் டத்தோ அஸ்மான் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதமரின் அரசியல் செயலாளராக இருக்கும் டத்தோ அம்மானின் உதவியாளர் பிரின்ஸ் ஜோனதன் வேலா ஆவார்.

என்னை நம்பி வாக்களித்த கெஅடிலான் உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் அவர்.

தகவல்: செ.வே. முத்தமிழ் மன்னன். தலைவர் – மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை