Monday, April 20, 2026

பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர்

இன்று மேத் திங்கள் ஏழாம் நாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், சென்னையில் பொதுமக்களுடன் பொதுப் பேருந்தில் பயணம் செய்தார்.

சென்னை வள்ளலார் நகரில் இருந்து விவேகானந்தர் இல்லம் வரை செல்லும் 32பி பேருந்தில் அரசினர் தோட்டம் ஓமந்தூரார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணம் செய்த மு க ஸ்டாலின், பேருந்தில் பயணம் செய்த பெண் பயணிகளிடம் உரையாடினார்.

அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா சி சிவசங்கர் ஆகியோரும் பயணம் செய்தனர்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை