Friday, September 18, 2026

இனவெறுப்புத் தூண்டுதல்-பாதுகாப்பு அச்சுறுத்தல்: தேசிய போலீஸ் படைத் தலைவர் தலையிட வேண்டும்! -பொன்.வேதமூர்த்தி

மலேசிய அரச காவல் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன்

தேசிய பாதுகாப்பிற்கும் சமூக ஒற்று-மைக்கும் கடுமையான மருட்டல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இதன் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய காவற்படை தலைவரை மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன். வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்து கோவில்கள் சட்டவிரோத-மானவை; இந்திய சமூகத்தை அவர்களின் இடத்தில் வைக்க மே-13 போன்ற கலவரம்; கோயில்கள்மீது குண்டு வீசப்பட வேண்டும் என்றெல்-லாம் இந்திய மற்றும் இந்து சமூகத்திற்கு எதிராக முகநூல், வேஸ் போன்ற சமூக ஊடகத்தில் வெறுப்புப் பேச்சு, இன விரோத தூண்டுதல் மற்றும் வன்-முறையை வெளிப்படையாக ஆதரித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துகளின் ஆபத்து குறித்து நடவடிக்கை எடுக்கும்-படி தேசிய காவற்படை துணைத் தலைவருக்கு 2025 ஏப்ரல் 7-ஆம் நாள் கடிதம் அனுப்பிய நிலையில், அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மலேசிய அரச காவல்-படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேனுக்கு சமூக உரிமைப் போராளி-யுமான பொன்.வேதமூர்த்தி நேற்று ஜூன் 05-ஆம் நாள் அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வழிபாட்டுத் தலங்களை சிறுமைப்-படுத்துவதும் இனரீதியாக மிரட்டுவதும் வெறும் ஆத்திரமூட்டும் நடவடிக்கை மட்டுமல்ல; சட்டங்களைமீறும் கடுமை-யான குற்றச் செயல் ஆகும். நாட்டின் அமைதி, பொது ஒழுங்கு மற்றும் பல இன ஒற்றுமைக்கு நேரடியாக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.

சமூக உரிமைப் போராளி பொன் வேதமூர்த்தி

இருப்பினும், இந்த விவகாரத்தின்மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்று தெரிவித்துள்ள தேசிய காவற்-படை துணைத் தலைவரின் மௌனம், வெறுப்பைத் தூண்டும் தரப்பினருக்கு பச்சைக் கொடி காட்டுவதைப் போன்ற சமிக்ஞையை தெளிவாகக் காட்டுகிறது.

சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் தரப்பினர்மீது அரச மலேசிய காவல்-படை தீர்க்கமாக செயல்படத் தவறியது, சபா மற்றும் சரவாக்கில் உள்ள சிறு-பான்மை மக்கள் உள்ளிட்ட பொதுமக்க-ளிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்து-வதுடன் எதிர்காலத்தில் மோசமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே, தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதுடன் குற்றவியல் புலனாய்வுத் துறை, ‘சைபர் கிரைம்’ பிரிவு, மற்றும் மலேசிய தகவல் பல்லூடக ஆணையம் ஆகிய அமைப்பு-களின் அதிகாரிகளை உட்படுத்தி ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

நாட்டின் நிலைத்தன்மை, பொதுப் பாதுகாப்பு, மற்றும் சட்டத்தின் மேன்மை ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக அமைதியாக இருக்கும் நிறுவனங்கள் தங்கள் கடமையிலிருந்து தவறுவதுடன், சமூக பிரிவினை, வகுப்புவாதம் புரிவோருக்கு உடந்தையாக இருக்கின்றனர் என்றும் கருத வாய்ப்பேற்படும்.

எனவே, தேசிய காவல்படை, இன-மத வெறுப்பைத் தூண்டும் தனிநபர்கள், அவர்களுக்கு துணைபோகும் சமூக வலைதளங்கள், குறிப்பாக வன்-முறைக்கு வித்திட்டு வழிபாட்டுத் தலங்களை அவமதித்தவர்கள்மீது உடனடி விசாரணை நடத்த வேண்டும்;

காவல் படை நடுநிலைமையையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதியாக நிலைநிறுத்துவதுடன் இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மலேசியர்களுக்கும் சமமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்;

சிறுபான்மை சமூகங்களை இலக்காகக் கொண்ட டிஜிட்டல் வெறுப்புப் பிரச்சாரத்தை அணுக்கமாகக் கண்காணித்து விரைவாகச் செயல்படுவதற்கு ஏதுவாக ஒரு பணிக்குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் டான்ஸ்ரீ ரஸாருடினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை