Tuesday, April 21, 2026

ரவாங் சுங்கை காரிங் பூர்வகுடி கிராமத்தில் சூரிய ஆற்றல் மின்விளக்குகள் -ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு ஏற்பாடு

ராவாங், சுங்கை காரிங் ஒராங் அஸ்லி கிராமத்தில், அந்தப்பகுதிவாழ் மக்க-ளின் அன்றாட நல்வாழ்வைவும் பாது-காப்பையும் உறுதிசெய்வதற்காக சூரிய ஆற்றல் விளக்குகள் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு முன்னிலையில் நேற்று ஜூன் 12-வெள்ளிக்கிழமை பொருத்தப் பட்டன.

மாநில ஆட்சிக் குழுவில் பூர்வகுடி மக்களின் மேம்பாட்டிற்கும் பொறுப்-பேற்றுள்ள பாப்பா ராய்டு, அந்த மக்களின் மேம்பாடு குறித்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

வெ.19,976 செலவில் அமைக்கப்பட்ட இந்த 6 சூரிய மின்விளக்குகள், பூர்வகுடி கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுவதுடன் சுற்றுச் சூழலுக்கும் உகந்தது; அதேவேளை குறைந்த செலவில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இதன் தொடர்பில் பாப்பா ராய்டு கருத்து தெரிவித்தார்.

“தான் தலைமை தாங்கும் ஒராங் அஸ்லி மற்றும் சிறுபான்மையினர் நலக் குழு-வின் மூலம், தேசியக் கொள்கைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சமூக நீதி மற்றும் நிலையான வளர்ச்சியின் கொள்கைகளுக்கு இணங்க, ஒராங் அஸ்லி சமூகம் உட்பட மலேசியக் கூட்டு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான முன்னேற்-றத்தை ஏற்படுத்துவதில் மாநில அரசு எப்போதும் உறுதிபூண்டுள்ளது” என்றார் பாப்பா ராய்டு.

பூர்வகுடி மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சி குறித்த நடவடிக்கைகள் தொட-ரும் அதேவேளை, இந்த மக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்-டிய கடப்பாடு மாநில அரசுக்கு உள்ளது. தேசிய வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து எந்தவொரு சமூகமும் விடுபடாமல் இருப்பதில், மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டின் வெளிப்பாடு இதுவென்று அவர் மேலும் சொன்னார்.

இந்த இலக்கை அடைவதில் அரசுசார் நிறுவனங்கள், மத்தியக் கூட்டரசின் பூர்வகுடி மேம்பாட்டு வாரியமான JAKOA மாநிலப் பிரிவு, மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் ஒத்துழைப்பு யாவும் முக்கிய பங்கு வகிக்கிறன.

இந்த வேளையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக பாப்பா ராய்டு மேலும் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை