எம்ஏபி கட்சியும் ஹிண்ட்ராஃப் இயக்கமும் தேவையான தீர்வுகளை வழங்கிவிட்டன. உரிமைக்குக் குரல்கொடுத்து, உறவுக்கு கைகளை நீட்டுகிறோம். ஆனாலும் அரசாங்கம் கதவை இறுக்க மூடிவிட்டு, ஒரு முழு சமூகத்தின் வாழ்க்கை யதார்த்தங்களை புறக்கணிக்க முடிவு செய்கிறது. போதும்; இதுவரை இழைத்த அநீதி போதும்!

மலேசிய இந்திய சமுதாயத்தை தொடர்ந்து புறக்கணித்துவரும் பிரதமர் அன்வார் இப்ராகிமின் சாயத்தை, 13-ஆவது மலேசிய பெருந்திட்டம் (ஆர்.எம்.கே.13), வெளுத்துக் காட்டுகிறது.
13வது மலேசியத் திட்டம்-RMK-13 உருவாக்கத்தில், மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி மற்றும் ஹிண்ட்ராஃப் இயக்கத்துடன் விவேகம் சார்ந்த அல்லது நியுணத்துவ அடிப்படை என எந்த வகையிலும் ஈடுபடுத்தத் தவறிய பிரதமர் அன்வார் இப்ராகிமின் நிலை மிகுந்த வருத்தத்திற்கு உரியது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமுர்த்தி தெரிவித்துள்ளார்.
அன்வாரின் அப்பட்டமான இந்தப் புறக்கணிப்பு, குறிப்பாக இந்தியர்களின் பொருளாதார மீட்சிகுறித்து வரிசையாக அனுப்பிய கடிதங்களை அடியோடு அலட்சியப்படுத்திய அவரின் கடும்-போக்கு, ஏற்றுக்கொள்ள முடியாதது. இது, நீண்ட காலமாக ஒதுக்கி வைக்கப்-பட்டிருந்த இந்திய சமூகத்தை வேண்டு-மென்றே அரசியல் ரீதியாகவும் புறக்-கணிக்கும் செயலாகும்.
‘தேவை சார்ந்த’ அணுகுமுறையை மேற்கொள்வதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த அரசாங்கத்தின் இத்தகைய நிலை, அதன் பாசாங்குத் தனத்தை நன்கு வெளிப்படுத்துகிறது. இந்திய ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப் பட்டவர்களின் உரிமைகளுக்காக பல தசாப்தங்களாக குரல்கொடுத்துவரும் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க மறுக்கும் பிரதமர், இன்னொருபுறம் சமச்சீர் பொருளாதாரத்தைப் பற்றி பேசுவது, இன்னொரு ‘வெற்று முழக்கம்’ என்பதைக் காட்டுகிறது. இது, மறு-மலர்ச்சி சாயம் பூசப்பட்ட வெற்றுக்கூடு என்று சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்தி கடுமையாக சாடியுள்ளார்.

நலிந்த இந்திய சமுதாயத்திற்காக, தாங்கள் கோரிக்கைவைத்த வெ.25 பில்லியன் என்பது, தேசிய பட்ஜெட்டில் 1% மட்டுமே என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்; இதுவொன்-றும் நன்கொடைக்கான கோரிக்கை அல்ல; மாறாக தரவு, போராட்டம், நீண்டகாலமாகவே முறைப்ப்படுத்தப்-படும் ஒதுக்குமுறை ஆகியவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கையாகும். மலேசியா உண்மையிலேயே ஒரு நீதியான மற்றும் சமத்துவமான நாடாக விளங்க விரும்பினால், இந்த சமூகமும் மற்ற சமூகங்களைப் போலவே, முதலீடு மற்றும் மீள்கட்டமைப்பு ஆதாரத்தைப் பெறத் தகுதியானது. இதற்குக் குறை-வான எதுவும் அநீதியாகும்.
இதில் இன்னும் மோசமானது, பக்கத்-தான் கூட்டணியைச் சேர்ந்த இந்திய எம்பி-க்கள் எதையும் பேசாமல், எதையும் கேட்காமல் கொலு பொம்மையைப் போல நாடாளுமன்றத்தில் இருப்பது-தான்; தன்னை ஆட்சிக் கட்டிலுக்கு உயர்த்திய பெரும்பான்மை மக்களை பிரதமர் வஞ்சிப்பதைப் போலவே, மாற்றத்திற்கான வாக்குறுதியின் பெயரில் வெற்றிபெற்ற இந்திய மக்கள் பிரதிநிதிகளும் வெறுமனே வந்து-போகின்றனர். இது, தலைத்துவத்துவம் அல்ல; துரோகம் என்று முன்னாள் அமைச்சருமான பொன். வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


