
நாட்டின் 10ஆவது பிரதமர், தான் எதிர்-கொண்டிருக்கும் சிவில் வழக்கு தொடர்பில், தான் பிரதமர் என்பதால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்-பட வேண்டும் கோரிக்கை வைக்கும் அதேவேளை, மூத்த நீதிபதிகள் மற்றும் தேசிய காவல்படைத் தலைவர் நியமனம் தொடர்பில் முக்கியப் பங்காற்ற இருக்கி-றார். குறிப்பாக, இதன் தொடர்பில் மாண்புசால் மாமன்னருக்கு அரசியல் சாசனப்படி ஆலோசனையும் பரிந்துரை-யும் வழங்க இருப்பதால், பிரதமர் பொறுப்பிற்கும் கடமைக்கும் கடுமையான கொள்கை முரண்பாடு அல்லது நலன்கள் மோதல்(Conflict of Interest) ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முழுமையாக மதிப்பீடு செய்து, தீவிர ஆலோசனை மேற்-கொண்டபின், இந்த நிலை மிகவும் கவலை தரக்கூடியதென்று பொன்.வேத மூர்த்தியும் ரஃபிக் ரஷீட்டும் தெரிவித்து உள்ளனர்.

மலேசியாவின் நீதித்துறை அமைப்பும் ஜனநாயக நிறுவனங்களின் நேர்மையும் குறைகூறலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதிகரித்துவரும் சட்ட சர்ச்சைகள் மற்றும் பொதுமக்களின் அமைதி-யின்மையை எதிர்கொள்வதில், அவசரமான தீர்க்கமான நடவடிக்கை தேவையென்று ஹிண்ட்ராஃப் இயக்கம் மற்றும் எம்ஏபி கட்சித் தலைவரும் பெஜுவாங் கட்சி சட்ட ஆலோசகருமான இவ்விருவரும் வலியுறுத்துகின்றனர்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க ஒரு வட்டமேசைக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
கோலாலம்பூர், WISMA SRI TAMADDUN-இல்(Kampung Datuk Keramat, 6-Jalan Damai), வரும் திங்கட்கிழமை ஜூன் 23, மாலை 5:00 முதல் 7:00 மணிவரை நடைபெற உள்ள இந்த வட்டமேசைக் கூட்டத்தில், மலேசிய நீதித்துறையின் சுதந்திரம், பாரபட்சமற்ற தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்தெல்லாம் நடுநிலை தவறாமல் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இந்த முக்கியமான தேசிய உரையா-டலில் பங்கேற்க சட்ட வல்லுநர்கள், சிவில் சமூக அமைப்புகள், கல்வி அமைப்புகள், நீதித்துறையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அக்கறையுள்ள அனைத்து மலேசியர்களையும் தாங்கள் அழைப்பதாக பொன்.வேதமூர்த்தியும் ரஃபிக் ரஷீட்டும் ஒருசேரக் கேட்டுக் கொள்கின்றனர்.


