
மலேசிய சுதந்திர நாள் என்பது 1957-ஆம் ஆண்டு பிரித்தானிய குடிமைவாத ஆட்சியிடமிருந்து மலாயாக் கூட்டமைப்பு ஆகஸ்ட் 31-ஆம் நாளில் சுதந்திரம் பெற்றதன் அடிப்படையில் ஆண்டுதோறும் 31-ஆம் நாள் கொண்டாடப்படும் சுதந்திர தினமாகும்
.
1957 ஆகஸ்ட் 30 இரவு கோலாலம்பூர் அரச சிலாங்கூர் மன்றம், விடுதலை சதுக்கத்தில் பிரித்தானியர் ஆட்சியை ஒப்படைக்கும் நிகழ்வைக் காண ஏராளமானோர் குழுமினர். பிரதமராக பதவி ஏற்க இருந்த துங்கு அப்துல் ரகுமான் 11:58 பின்னேரத்தில் வந்தார். அவருடன் மலேசியக் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

இரண்டு நிமிடம் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டு யூனியன் கொடி கீழே இறக்கப்பட்டது. மலேசியாவின் புதியகொடி ஏற்றப்பட்டு மலேசிய நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. மலேசிய நாட்டுப்பண் இசைக்கப்பட்ட பின்னர், ஏழு முறை மெர்டேக்கா என்று பொதுமக்கள் குரல் எழுப்பினர். பின்னர் துங்கு அப்துல் ரகுமான் பேசியபோது, “மலாயா மக்களின் வாழ்வில் சிறப்பான தினம்” என்று வர்ணித்தார்.
1957 ஆகஸ்ட் 31 காலை கொண்டாட்ட நிகழ்வுகள் இதற்காகவே அமைக்கப்பட்ட மெர்டேக்கா மைதானத்தில் நடத்தப்பட்டது. காலை 9:30 மணி அளவில் தொடங்கிய அந்தக் கொண்டாட்டத்தில் 20,000க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மலாய் மாநில ஆட்சியாளர்கள், வெளிநாட்டு தூதர்கள், கூட்டரசின் அமைச்சர்கள், மற்றும் குடிமக்கள் கலந்து கொண்டனர்.

மலேசியா சுதந்திர மாதத்தை முன்னிட்டு Persatuan Alumni MIYC Selangor சங்கம் ஏற்பாடு செய்த பட்டயம் மற்றும் தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது .முன்னேற்றமான மற்றும் இளைஞர்களுக்கான சமூகப்பணிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் MIYC Malaysia Negeri Selangor சங்கம், மலேசிய சுதந்திர மாதத்தை முன்னிட்டு மக்களுக்கிடையே தேசிய உணர்வை ஊட்டும் விதமாக தேசியக் கொடிகளை இலவசமாக வழங்கும் நிகழ்வை நடத்தியது.
இந்த நிகழ்ச்சி, தலைவர் ஆறுமுகம், துணைத் தலைவர் சிவகுமார், செயலாளர் ஜெயராம் ஆகியோரின் தலைமையில், சங்க உறுப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.

இனம், மொழி, மத பாகுபாடின்றி அனைவரின் ஒற்றுமையே நாட்டின் உருவாக்கத்திற்கு பங்களித்தது. இது மலேசியாவின் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நாட்டின் மீது கொண்ட பற்று என்பதை எடுத்துக்காட்டுகிறது.
“மலேசியா, நம் மண்; நம் பெருமை!” என்னும் தேசிய உணர்வைக் கொண்டு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடத்திலும் நாட்டுப்பற்றை வளர்க்கும் நோக்குடன் இந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
நாட்டின் 68வது சுதந்திரத்தை வரவேற்கும் இந்த மாதத்தில், இத்தகைய முயற்சிகள் சமூகத்தில் அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
சுதந்திர தின வாழ்த்துகள்!
Selamat Hari Merdeka !
தகவல்:
ஆறுமுகம், கிள்ளான்


