Tuesday, April 21, 2026

பன்னாட்டு பழங்குடி மக்கள் நாள்! -சிறப்பு நிகழ்ச்சியில் பாப்பா ராயுடு பங்கேற்பு!!

இன்று ஆகஸ்ட் ஒன்பதாம் நாள்
உலக பழங்குடி பெருமக்கள் நாள் உலக அளவில் கொண்டாடப்படுகிறது.

இதன் தாக்கம் மலேசியாவின் மையப் பகுதியான சிலாங்கூர் மாநிலத்திலும் பிரதிபலிக்கிறது.

இதன் தொடர்பில் பூர்வகுடி நல வாரியத்தின்(JAKOA) சிலாங்கூர் மாநிலப் பிரிவின் (அரசின்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பா ராயுடு இன்று காலையில் கலந்து கொண்டார்.

Kampung Kelinsing
வட்டாரத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் வட்டார பூர்வகுடி மக்களுடன் ‘மகிழ் மெதுநடை’ நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்ட பூர்வ கூடி மக்களுடன் பூர்வ குடி நல வாரிய சிலாங்கூர் – கூட்டுரசு வளாக மாநில இயக்குனர் முகமட் அனீஸ், சிப்பாங் நகர் மன்றத்தின் சார்பில் திருமதி அர்ஃபா, UPEN துணை இயக்குனர் திருமதி இடாயுஅமீமா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

உலகப் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அம்ம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 09 அன்று இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகப் பிரச்சினைகளை மேம்படுத்துவதில் பூர்வ குடிமக்கள் ஆற்றி வரும் பங்களிப்பையும் இந்த நாள் உலக அளவில் பதிவு செய்கிறது.

1982-இல் மனித உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் ஆகியவற்றிற்கான துணை ஆணையத்தின் பழங்குடி மக்களுக்கான ஐ.நா. பணிக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற நாளைக் குறிக்கும் வகையில், இந்நாள் 1994 டிசம்பர் மாதத்தில் ஐநா மன்ற பொதுச் அவையால் முன்மொழியப்பட்டு, 2007 செப்டம்பர் 13-இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மலேசியாவிலும் பூர்வகூடி மக்கள் மிகுதியாக வாழ்கின்ற நிலையில் அவர்களின் பாதுகாப்பிற்கும் மேம்பாட்டிற்கும் என தனி துறையை ஏற்படுத்தி உள்ள மலேசிய அரசாங்கத்தின் முயற்சி பாராட்டுதற்குரியது.

Kampung Kelinsing பூர்வ குடி பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கூட்டு துப்புரவு பணியும் இணைத்துக் கொள்ளப்பட்டது.

மொத்தத்தில் இன்றைய இந்த நிகழ்ச்சிக்கு பூர்வ குடி மக்களின் தலைவர் Tok Batin, அரசு நிறுவனங்களான சிப்பாங் மாவட்ட அலுவலகம்,, மாவட்ட நில அலுவலகம் மாவட்ட சுகாதார நிலையம், கோம்பாக் பூர்வ குடிமக்கள் மருத்துவமனை, பணியிட பாதுகாப்பு சமூக மையம் சொக்சோ, சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம், சிலாங்கூர் பொது நூலகம் ஆகியவற்றின் சார்பிலும் பங்களிப்பு நல்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி மொத்தத்தில் பூர்வ குடி மக்களுக்கும் அரசாங்கத்திற்கு இடையேயான உறவை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவுவதாக தெரிவித்த பாப்பா ராய்டு, பன்னாட்டு பூர்வ குடிமக்கள் நாள் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்

.இன்றைய நாள் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள்; பக்கத்து சின்னஞ்சிறு தீவு நாடான சிங்கப்பூருக்கு விடுதலை நாள் இன்று.

சிங்கப்பூர் குடியரசிற்கும் அதன் குடிமக்களுக்கும் குமரி நல்லாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறாள்!.

தமிழ் மேதை க ப அரவாணன், இந்திய அரசியல் சாசன உருவாக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் சிறப்பாக பங்காற்றிய அல்லாடட ராமகிருஷ்ணன் ஆகிய பெருமக்களுக்கு இன்று பிறந்தநாள்.

அல்லாடி இராமகிருஷ்ணன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை