
68-ஆவது விடுதலை நாளை முன்னிட்டு மஇகா இளைஞர் பிரிவினர் கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் நேற்று பிற்பகலில் மிருக முழக்கம் எழுப்பியத்துடன் வாகனங்களை இடைநிறுத்து தேசியக் கொடியை நாட்டினர்.
ஸ்ரீ பாண்டி உணவகத்தின் அருகே அணி திரண்ட மஇகா இளைஞர் பட்டாளத்தை கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் டத்தோ சைமன் ராஜா வழிநடத்தியத உள்ள டன், ஒன்று திரண்டிருந்த இளைஞர் பிரிவினர், ஆளுக்கு ஆள் வாகனங்களை நிறுத்தி தேசிய கொடியை முன் கண்ணாடியில் பதித்த பொழுது வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

ஒரு கட்டத்தில் வாகன நெரிசல் ஏற்படும் அளவிற்கு மஇகா இளைஞர் அணி தேசியத் தலைவர் அர்விந்த் தலைமையிலான இளைஞர் பிரிவினரும் கேசவன் தலைமையிலான புத்ரா பிரிவினரும் அந்த வழியாக வந்த வாகனங்களில் தேசியக் கொடியை ஒட்டியபொழுது, ஒருசில வாகன ஓட்டியருக்கு சற்று இடையூறாக இருந்தாலும் நாட்டுப்பற்றை முன்நிறுத்தி மஇகாவினரின் தேசப்பற்றை மனதில் கொண்டு புன்முறுவலுடன் கடந்து சென்றனர்.
ஒரு சில மகிழுந்தின் ஓட்டுநர்கள் “இது தங்களுடைய வாகனம் இல்லை என்றும் நண்பர்-உறவினருடையது” என்றெல்லாம் சொல்லி தேசியக் கொடியை ஒட்டிக்கொள்ள தயங்கியபொழுது, “அப்படியானால் உங்கள் வாகனத்தில் ஒட்டிக் கொள்ளுங்கள்” என்று கூறி கொடியை வழங்கியபொழுது இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டனர்;

அதேபோல மோட்டார் சைக்கிள் ஒட்டிகளும் கொடிகளை பெற்றுச் சென்றனர்.
இதனால் பிரிக் ஃபீல்ட்ஸ் முச்சந்திப்பில் தேசிய முழக்கமும் மெர்டாக்கா உணர்வும் பிரதிபலித்தன
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த், இன்று மட்டும் ஆயிரம் தேசியக் கொடிகளை விநியோகம் செய்ததாகவும் இதைப்போல நாடு முழுவதும் மஇகா இளைஞர் பிரிவின் சார்பில் ஆங்காங்கே தேசியக் கொடிகளை விநியோகிக்கும் அல்லது தேசிய கொடிகளல வாகனங்களில் பதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

“கொடி என்பது வெறும் கொடி மட்டுமல்ல; இது தேசிய உணர்வின்- விடுதலைப் போராட்டத்தின் அடையாளம் ஆகும்
ஜாலோர் கெமிலாங் என்னும் இந்த தேசியக் கொடி, நாட்டு விடுதலைக்காக எண்ணற்ற தியாகம் புரிந்த ஈகியரின் நினைவைப் போற்றுவதாகும்; தேசத்தின் அடையாளமாகும்; நாடு விடுதலை அடைவதற்காக எண்ணற்றோர் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நாட்டின் பெருமையை நிலைநாட்டி உள்ளனர்; அத்தகைய மேலோரின் தியாகத்தை மதிக்கும் வகையிலும் தேசிய உணர்வையும் விடுதலை நாளையும் போற்றும் வகையிலும் இன்று மஇகா சார்பில், குறிப்பாக தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் வழிகாட்டலில் தேசியக்கொடி வினியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக அர்வின் மேலும் தெரிவித்தார்.

தேசியக்கொடியை கையில் ஏந்தி இருக்கின்ற ஒவ்வொரு மலேசியரும் கட்டோழுங்கு, நாட்டுப்பற்று உள்ளிட்ட தேசியப் பாங்குடன் திகழ்வார்கள் என்பது திண்ணம் என்று தெரிவித்த அர்விந்த், இன்றைய இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்து நேரில் வந்து தங்களை எல்லாம் ஊக்குவித்த விலாயா மாநில ல் தலைவர் டத்தோ சைமன் ராஜுக்கு இளைஞர் பிரிவின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அர்விந்த் தெரிவித்தார்.


