Wednesday, April 15, 2026

‘ஜாலோர் கெமிலாங்’ அலங்கரிப்புடன் கார் பவனிவரும் இராஜேஸ்வரி!

தன் மகிழுந்தை ஜாலோர் கெமிலாங் என்னும் தேசிய கொடிகளால் அலஙகரித்து, ஈப்போ மாநகரம் மற்றும் புந்தோங் வட்டாரத்தில் பவனி வருவதுடன் நாட்டுப்பற்றையும்
வெளிப்படுத்தி வருகிறார் ராஜேஸ்
வரி.

புந்தோங் தாமான் ஹார்மோனி
அடுக்ககத்தில் வசிக்கும் தனித்து வாழும் தாய் ராஜேஸ்வரி
குருசாமி, தன் பெரோடுவா
கெம்பாரா வாகனத்தில் ஜாலோர்
கெமிலாங் தேசிய கொடிகளைக்
கொண்டு அலஙகரித்து ஈப்போ நகரில்
பவனிவந்து தேசிய
உணர்வை வெளிப்படுத்தி
வருவது பலரின் கவனத்தை
ஈர்த்துள்ளது.

அத்துடன், தற்போதைய தேசிய மாதத்தில் தன்
வாகனத்தின்மூலம் தேசிய உணர்வுப்
பாடல்களையும் ஒலிக்கச்செய்து, பேராக் தகவல் துறை இயக்குனர் யோஸ்ரி
அபு மாஷின்
பாராட்டையும் பெற்றுள்ளார்.

அண்மையில் ஈப்போ இரயில்
நிலையத்தில் ஏற்பாடு செய்யப்
பட்ட ஒரு நிகழ்வில் கலந்து
கொள்ள வந்த பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்,
வருகையாளர்களுடன் நடந்து வந்தபோது, இதே ராஜேஸ்வரி பிரதமருடன் ‘தம்படம்'(Selfie) எடுக்க முயன்றார். அதை கவனித்த பிரதமர், ராஜேஸ்வரியை அருகில் அழைத்து படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தது அவருக்கு மட்டுமல்ல; சுற்றி இருந்த அனைவருக்கும் உற்சாகமாக அமைந்தது.

பிரதமருடன் தம்படம் எடுத்த பொழுது சுற்றி இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி இன்ப ஆரவாரம் செய்தது வாழ்வில் மறக்க முடியாத இனிய அனுபவம் என்று உணவுக்கடை நடத்துனருமான
ராஜேஸ்வரி தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை