Sunday, April 19, 2026

மஇகா-வை வசை பாடியவர்கள் இப்பொழுது தங்கள் வாயை பசைபோட்டு ஒட்டிக் கொண்டுள்ளனர்! -சாவ்ஜானா புத்ராவில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் காட்டம்!!

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மஇகா பற்றி கண்டப்படி திட்டினார்கள்.
ஆனால் மஇகா இருந்த இடத்தில் இப்போது இருப்பவர்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்கள் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கடுமையாக சாடினார்.

“காலை முதல் இரவு வரை மஇகா-வை துப்புனானுங்க. அதை அவனுங்களே நக்கிட்டானுங்க” என்று மிக மிக மோசமாக விமர்சித்தார் . கடந்த 60 ஆண்டுகளாக மஇகாவை பற்றி கண்டப்படி திட்டினார்கள்.

காலையில் எழுந்தவுடன் எதிர் கட்சியில் இருந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டிக் கொண்டே இருந்தார்கள்.

காலையில் திட்டுவார்கள் பின்னர் மாலையிலும் திட்டுவார்கள். பின்னர்
வயிறுமுட்ட உண்டபின் தூங்க போய் விடுவார்கள். மறுநாள் காலையில் எழுந்ததும் மீண்டும் மஇகா-வைத் திட்டத் தொடங்கி விடுவார்கள்.

அப்படி திட்டியவர்கள் இப்பொழுது அரசாங்கத்தில் இருக்கும் நிலையில் வாயைதா திறப்பதில்லை என்று விக்னேஸ்வரன் மஇகா சிலாங்கூர் மாநிலக் கிளையின் 79 ஆவது மாநாட்டை சௌஜானா புத்ரா மாசா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த உரையாற்றிய பொழுது காட்டம் காட்டினார் .

மஇகா அப்படி இல்லை;
இந்திய சமுதாயத்திற்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் ஓரே கட்சியாக மஇகா விளங்குகிறது என்று அவர் சொன்னார். இன்று அரசாங்கத்தில் எந்தவொரு பதவியும் எங்களுக்கு இல்லை. இருப்பினும் மஇகா இன்னமும் இந்திய சமுதாயத்தின்மீது அக்கறையும் பாசமும் கொண்டு சேவையாற்றி வருகிறது.

கோலாலம்பூர் அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் என் தாலாட்டுடன் உருவான கட்சி மஇகா என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.

இந்திய சமுதாய உயர்க் கல்வி மாணவர்களுக்கு இன்னமும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் கல்வி உதவிநிதி வழங்கி வருகிறது என்றார் அவர்.

இதுவரை 47 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளோம்.இதையும் சிலர் சமூக வலைத்தளத்தில் சாடிக்கொண்டு இருப்பார்கள்.

ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ அஜோகன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன், செயலாளர் டத்தோ ஆனந்தன் பொருளாளர் டத்தோ ந. சிவகுமார் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை