Thursday, April 23, 2026

டத்தோ விருது பெற்ற முருகவேலிற்கு சிறப்பு!

மலக்கா மாநில ஆளுநரின் பிறந்தநாள் தொடர்பில் பல்வேறு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்களில் டத்தோ விருது பெற்ற எஸ். முருகவேலும் ஒருவர்; மஇகா மத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவருமான இவர், டத்தோ விருது பெற்றதன் தொடர்பில் மஇகா ஷா ஆலம் தொகுதித் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

ம.இ.கா. தேசிய ஊடகப் பிரிவு தலைவர் எல். சிவசுப்பிரமணியன், மத்திய செயலவை உறுப்பினர் சுப்பிரமணியன் கருப்பையா, சிலாங்கூர் இளைஞர் பிரிவு தலைவர் சுகன், ஷா ஆலம் தொகுதிக்கு உட்பட்ட கிளைத் தலைவர்கள் மாநில இளைஞர்- மகளிர்-புத்ரா-புத்ரி பிரிவு பொறுப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

40 ஆண்டுகளுக்கும் மேல் ம.இ.கா.-உடனான வரலாற்றைக் கொண்டிருக்கும் முருகவேல், துன் சாமிவேலு காலத்தில் இளைஞர் பிரிவில் இணைந்து கட்டம் கட்டமாக இன்றைய இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதாக வழக்கறிஞருமான முருகவேலைப் பாராட்டிய பலரும் குறிப்பிட்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை