Tuesday, April 21, 2026

கரூரில் 41 பேர் மறைவு: -பாப்பா ராய்டு இரங்கல்

இந்தியா, தமிழ் நாட்டில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி சார்பில் கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தின்போது நடந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக சிலாங்கூர் ஜனநாயக செயல் கட்சி தலைவர்களில் ஒருவரான வீ.பாப்பா ராய்டு தெரிவித்துள்ளார்.

40க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ள இந்த துயரச் சம்பவம், நம் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியாக இருந்தாலும், ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் பாதுகாப்பையும் சரியான திட்டமிடலையும் உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தலைவர்களும் காவல்துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும், இந்த கடினமான நேரத்தில் அவர்களின் அன்புக்குரியவர்கள் வலிமை பெறட்டும் என்று பாப்பா ராய்டு மேலும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை