Monday, April 20, 2026

உணவகத் தொழிலில் இன்னொரு சாதனை! பங்சார் காரசார உணவகக் கிளையில் ஒரே நாளில் 4,668 பேருக்கு விலையில்லா உணவு!

-நக்கீரன்

கோலாலம்பூர், நவ.29:
மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் அளவிற்கு மலேசிய இந்தியர் உணவகத் தொழிலில் இன்னொரு சாதனை படைக்கப்பட்டுள்ளயு.

பங்சாரில் புதிதாக திறக்கப்பட்ட காரசார வாழை இலை உணவகத்தில் தொடர்ந்து 4,668 பேருக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை மதியம் இந்த உணவகம் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, உணவக நிருவாகத்தின் சார்பில் அனைவருக்கும் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு இவ்வாறு உணவு பரிமாறப்பட்டது.

வாடிக்கையாளர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என திரளானோர், கோலாலம்பூர், பங்சார், 9- ஜாலான் தெராத்தாய்-2 என்னும் இடத்தில் திறக்கப்பட்டுள்ள இப்புதியக் கிளையில் உணவருந்தினர்.

இதன் தொடர்பில், மலேசிய சாதனைப் புத்தக நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரி கிறிஸ்தோபர் வோங், சாப்பிட்டவர்களின் விவரங்களை சரிபார்த்து, பங்சார் கார சார உணவகத்தில் 4668 பேர் சாப்பிட்டனர் என்பதை உறுதியளித்து, அதற்கான சான்றிதழை வழங்கினார்.

மஇகா தேசியத் துணைத் தலைவர், டத்தோஸ்ரீ எம்.சரவணன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை