
2025 தீபத் திருநாளை முன்னிட்டு ம இ கா மகளிர் பிரிவு சார்பில் நலிந்த குடும்பங்களை சேர்ந்த பெண்கள் 500 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் பரிசுக் கூடைகளும் அளிக்கப்பட்டன.

இதன் தொடர்பில் இன்று அக்டோபர் 13 திங்கட்கிழமை பிற்பகலில் மஇகா தலைமையாக நேதாஜி அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மஇகா மகளிர் பிரிவுத் தலைவி சட்டமன்ற உறுப்பினர் ந. சரஸ்வதி அனைவரையும் வரவேற்று பேசிய பொழுது ஏறக்குறைய 120 பெண்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கலாம் என்று நினைத்து அதை தேசியத் தலைவரிடம் தெரிவித்த பொழுது 500 பேருக்கு கொடுக்கும்படி சொன்னதால் மிகவும் உற்சாகமடைந்த நாங்கள் இன்று விழா விலாயா மாநிலத்திலும் சிலாங்கூர் மாநிலத்திலும் 500 பெண்களை அடையாளம் கண்டு இங்கே வரவழைத்து அவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் பரிசுக் கூடைகளும் அளிக்க இருக்கிறோம் என்று மகிழ்வுடன் தெரிவித்தார்.

மஇகா மகளிர் தலைவியுடன் துணைத் தலைவர் டாக்டர் தனலட்சுமியும் முன்னின்று ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ந. முனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



