Thursday, April 2, 2026

பட்ஜெட் 2026: அன்வார் திட்டமிட்டு துரோகம் – இந்திய சமுதாயம் தொடர் புறக்கணிப்பு!

Made with LogoLicious Add Your Logo App

பிரதமர் அன்வார் அண்மையில் அறிவித்த நிதிநிலை அறிக்கை, அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதாக அவர் அடிக்கடி பறைசாற்றிக் கொள்வதற்கு பின்னால் உள்ள அப்பட்டமான பாசாங்குத்தனத்தை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தி இருகிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி- எம்ஏபி தேசியத் தலைவர் பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 10ஆம் நாள் அன்வார் அறிவித்த பட்ஜெட் உரையில் இந்திய சமூகத்திற்கான திட்டம்- ஒதுக்கீடு குறித்து அறிவிக்கத் தவறியது, மலேசிய கூட்டு சமூகத்தில் நீண்டகாலமாக ஒதுக்கப்பட்ட பிரிவின் அவலநிலை பற்றி அவருக்கு அக்கறை இல்லை என்பதையும் மலேசிய இந்தியர்களை தொடர்ந்து புறக்கணிக்கும் அவரின் போக்கையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

நலிந்த இந்திய சமூகம் குறைந்தபட்ச மீட்சியையாவது பெறுவதற்காக வெ.500 மில்லியனைக்கூட ஒதுக்க பிரதமர் மறுப்பது அவரது உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

மலேசிய இந்தியர்கள் நாட்டின் ஏழ்மையான, மிகவும் ஒதுக்கப்பட்ட பிரிவினர் என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தற்பொழுது கடுமையான சமூக பொருளாதார பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு காட்சியைத்தான் தருகிறாரேத் தவிர இந்தியர்களுக்கான மீட்சி குறித்து ஒருகாலும் சிறிதளவும் அக்கறைப் படுவதில்லை.

மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவைக் கண்காணிக்க அர்ப்பணிப்புள்ள அமைச்சரை நியமிப்பதில் அன்வார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்.

மித்ரா-விற்கு நிர்வாக ரீதியில் இயக்குனர் துணை இயக்குனர் ஆகிய பொறுப்பாளர்கள் நியமிக்காமல் தன் கட்சி எம்பி யையும் துணை அமைச்சரையும் சுழல் முறையில் மாற்றிமாற்றி நியமித்துவரும்
அன்வாருக்கு, மித்ராவின்வழி ஆக்கபூர்வமான மாற்றத்தை இந்திய சமுதாயத்திற்கு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் ஈடுபாடும் இல்லை. மொத்தத்தில் மித்ராவை ஒரு கண்காட்சி அம்சமாக கையாளவும் போக்குகாட்டவுமே அன்வார் விரும்புவதாகத் தெரிகிறது; இது மிகவும் கவலை தரக்கூடியது என்று சரித்திர சாதனை இயக்கம் ஹிண்டாராஃப் தலைவருமான பொன் வேதமூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த இந்தியத் தலைவர்கள், குறிப்பாக 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 15 சட்டமன்ற உறுப்பினர்களும் மௌனம் காப்பது இன்னும் ஏமாற்றமளிக்கிறது. மடானி அரசாங்கத்தில் மலேசிய இந்திய சமுதாயம் அனைத்து மட்டத்திலும் பின்தங்கி இருப்பது குறித்து பக்கத்தான் மக்கள் பிரதிநிதிகள் அக்கறைப் படுவதில்லை.

எனவே, சரியான தலைமையுடன் சமூகம் ஒன்றுபட்டு செயல்பட்டால் மாற்றத்தை நிச்சயமாக கொண்டு வர முடியும். அரசியல் அடையாளத்தை விட உண்மையான அதிகாரத்திற்கு முன்னுரிமை அளித்து நேர்மை மற்றும் நம்பகமான தலைமையின்கீழ் சமூகம் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டதால்
வரவிருக்கும் 16-வது பொது தேர்தலில் ஹிண்ட்ராஃப் மற்றும் எம்ஏபி போன்ற நம்பகமான, கொள்கை ரீதியான தலைமையின் பின்னால் இந்திய சமூகம் அணிதிரள வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சருமான பொன். வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிகையில் கேட்டுக்கொண்டு உள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை