Monday, April 20, 2026

ஹிண்ட்ராஃப் எழுச்சி நாள் நவம்பர் 25ல் இந்தியன் செட்டல்மெண்ட் குடிருப்பாளர்களுக்கு ஆதரவு! பத்து கேவ்ஸ் அமிருடின் அலுவலகத்தின்முன் ஆதரவுக் கூட்டம்!!

மலேசிய மக்கள் கனவிலும் நினைத்திராத அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய
ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணி
18-ஆம் ஆண்டு நாள் தொடர்பில் பாரம்பரிய பத்துமலை இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒன்றுகூடல் நாளை நவம்பர் 25ஆம் நாள் இரவு 8:00 மணி அளவில் அந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதியும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அலுவலகத்தின்முன் நடைபெற இருக்கிறது என்று ஹிண்ட்ராஃப் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pusat Khidmat Rakyat Dun Sungai Tua, Jalan 1, Dataran Selayang, Batu Caves என்னும் முகவரியில் உள்ள அமிருடின் அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னிரவில் இந்தியன் செட்டில்மெண்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஹிண்ட்ராஃப் அமைப்பினர் ஒன்று கூடுகின்றனர்.

தங்களின் பாரம்பரிய வீடுகள் உடைக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கவும் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் அங்கேயே நிலைத்திருக்க குரல் கொடுக்கவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இதில் கலந்து கொள்ளும்படி அந்த அறிக்கையில் மேலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை