
புதிய அரசியல் மாற்றத்தை இலக்காக கொண்டு
உரிமைக் கட்சி இரண்டாவது அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு முனைப்புடன் ஏற்பாடு செய்து வருகிறது.
நெடிய வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழினம் மலேசிய மண்ணில் கால்பதித்து 1,000 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த வரலாறு புதுப்பிக்கப்பட்டது
நாடு சுதந்திரம் அடைந்து 68- ஆண்டுகள் ஆன நிலையில் மலேசியாவில் மூன்றாவது பெரிய இனமான தமிழ்ச் சமுகத்தின் நிறைய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத ஒரு
தொடர்கதையாகவே இருக்கிறது.
பன்னெடுங்காலமாக இந்திய சமுதயாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாட்டில் மக்களாட்சி நிலைத்திருப்பதற்கு அந்த நாட்டு மக்கள் அந்த ஆட்சிமுறை மீது கொண்டுள்ள நம்பிக்கைதான் முதன்மையாக அமையும்.
இன்றைய ஒற்றுமை அரசாங்கத்தின் மீதும் இந்திய சமூகம் நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வெளிப்படையான உண்மை.
மலேசியாவில் 7% விழுக்காடு கொண்ட இந்திய சமூகத்தில் பொருளாதார, சமூக, அரசியல் துறைகளில் தீர்மானங்கள் எடுக்கும் இடங்களில் இந்தியர்கள் மிகக் மிக குறைவாகவே இருக்கின்றனர். அதை அதிகரிப்பதற்கான எந்த ஒரு முயற்சியும் இன்றுவரை மேற்கொள்ளவில்லை.
இன்றைய ஒற்றுமை அரசாங்க ஆட்சியில் தமிழ் பேசும் முழு அமைச்சர்கூட இடம்பெற வில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்திய சமூகத்திக்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளும் அறிவிப்புகளும் காகிதங்களிலேயே தேங்கி விடுகின்றன.
மலேசிய அரசியல் வரலாற்றில்
இந்திய கட்சிகள் நிறைய இருந்தும்
இன்றுவரை ஒரு அரசியல் கட்சிகூட வெகுமக்களின் நம்பிக்கையைப் பெறாமலேயே இருக்கின்றது.
இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் எதுவும் கொள்கை அளவில் இன்றுவரை வகுக்கப்படவில்லை என்பதே அதற்கு முக்கிய காரணம்.
அந்த குறைபாட்டை முற்றிலும் நீக்கி , குரலற்ற சமுதாயத்தின் குரலாக இன்று உரிமைக் கட்சி செயல்பட்டு வருகிறது. உரிமை அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக பதிவு செய்ய தொடர்ந்து சட்ட போராட்டங்களை நடத்தி வந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளி, ஆலயம், உயர்க்கல்வி, வீட்டுடைமை, நில உரிமை, குடியுரிமை , மற்றும் பிறப்பு சான்றிதழ் போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உரிமை இயக்கம் களத்தில் நின்றிருக்கிறது.
இந்த நிலையில் உரிமைக் கட்சி, நவம்பர் 30-ஆம் நாள், சா ஆலம் IDCC மண்டபத்தில் நடத்தவிருக்கும்
இரண்டாவது அரசியல் மாநாட்டுக்கு அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது


