Monday, April 20, 2026

மந்திரி பெசார் வாக்குறுதிக்கு நன்றி!வாக்குறுதியை நிறைவேற்றினால் இன்னும் நன்றி!! -இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்போர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நிம்மதியைத் தொலைத்து ஏறக்குறைய நெருக்கடி நிலைக்கு ஆளாகி வந்த பத்து மலை ‘இந்தியன் செட்டில்மெண்ட்’ குடியிருப்புப் பகுதியை சேர்ந்த 44 குடும்பத்தினர் தற்பொழுது ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

கோவிந்தராஜ் நாராயண சாமி

கோம்பாக் மாவட்ட நில அலுவலகத்தில் இருந்து தங்கள் வீடுகளை காலி செய்யும்படியும் அங்கு புது மேம்பாட்டு பணிகள் குறிப்பாக சாலை வசதி மேற்கொள்ளப்பட இருப்பதால் அந்த மேம்பாட்டு திட்டத்தில் பாதிக்கப்படுகின்ற குடும்பத்தினர் அனைவரும் தத்தம் வீடுகளை காலி செய்துவிட்டு வேற்றிடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் எப்பொழுது அறிக்கை பெற்றார்களோ அதிலிருந்து பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகி வந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மங்கள கீதா

இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பதை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்(முதலமைச்சர்) தவிர்த்து வந்ததால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மிகுந்த அதிருப்தியும் கவலையும் வேதனையும் கொண்டிருந்த நேரத்தில் டிசம்பர் 15ஆம் நாள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருடன் கோம்பாக் மாவட்ட நில அலுவலகத்தில் சந்தித்து அளித்த வாக்குஉறுதி, ஓரளவுக்கு இந்த பகுதி மக்களுக்கு ஆறுதலையும் நிம்மதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆலயத்தை நிர்வகித்து வரும் பிரகாஷ் துரைசாமி

இவர்களின் அல்லலையும் துயரத்தையும் ஊடகங்களில் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்த செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலையில் இந்தியன் செட்டில்மெண்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பு ஆலயத்திற்கு முன்பு அனைவரும் நன்றி தெரிவித்த அதேவேளையில், மேலும் கோரிக்கை வைத்தனர்.

ராஜசேகரன் சுப்பிரமணியன்

இந்த 44 குடும்பத்தினரும் ஆங்கிலேய நிர்வாகத்தினரால் உருவாக்கப்பட்ட இந்த குடியிருப்புப் பகுதியில் தொடர்ந்து வசித்து வருபவர்கள்; இந்தப் பகுதியில் குடியிருப்பு தலைவராக பொறுப்பேற்றிருக்கேம் தரப்பினர் நியாயத்தை நிலை நாட்டத் தவறி தன்னலபா போக்குடன் நடந்து கொண்ட விதம், ஆலயத்திற்கு சொந்தமான நிலம் இருக்கிறது என்ற விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தனக்கு மறைக்கப் பட்டதாக மந்திரி பசார் தெரிவித்த தகவல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஓரளவு ஆறுதலை அப்போதே அளித்தது.

செ. மகேந்திரன்

இருந்தாலும் வாக்குறுதி அளித்தபடி அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றும் மந்திரி பெசாரின்மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர் இந்த குடியிருப்பாளர்கள்.
2026 தைப்பூசத் திருநாளுக்குப் பிறகு இந்தப் பகுதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அனைத்து சிக்கலும் உரிய முறையில் ஆலோசிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று அமிருடின் வாக்குறுதி அளித்தபடி தங்களுக்கு வீட்டு வசதி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் இடைப்பட்ட காலத்தில் வீட்டிற்கான வாடகைத் தொகை அளிக்கப்பட வேண்டும் என்றும் அதைப்போல 1952 ஆம் ஆண்டு முதல் இங்கு செயல்படுகின்ற அருள்மிகு மாரியம்மன் ஆலயத்திற்கான நிலத்தையும் பட்டா செய்து அதற்கான ஆவணங்களை தைப்பூசத்திற்கு முன் அளிக்க வேண்டும் என்றும் இன்று செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்த கூட்டத்தில் இந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நடவடிக்கை குழு தலைவரும் மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான ரமேஷ் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

செல்வராசு மனைவி மல்லிகா கருப்பையா

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை