
அன்பும் சுயமரியாதையும் மாந்தநேயமும் கொண்ட மலேசியத் தமிழ்ச் சமூக மக்களுக்கும் மாந்தநேயப் பண்பாட்டை நேசிக்கும் அனைத்து தோழர்களுக்கும்,
தமிழ்ப்புத்தாண்டு 2057 – பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’
தமிழ்ப்புத்தாண்டு என்பது
சடங்கு, சம்பிரதாயங்களுக்கான நாள் அல்ல; தன்னம்பிக்கை, பகுத்தறிவு, சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை புதுப்பித்து உறுதி கொள்ளும் நாளாக இருக்க வேண்டும்.
உழைப்பின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் பொங்கல் நாள்,
உழைப்பாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் கடமைப்படுத்தும் நாளும்கூட.
மலேசியத் தமிழ்ச் சமூகத்தில் இன்னும் நிலவும் சாதிய சிந்தனைகள்,
மூடநம்பிக்கைகள், தொழிலாளர்களின் உரிமை மறுப்புகள் என அனைத்துக்கும் எதிராக மாந்தநேயப் பாதையில் பயணிப்பதே இந்தத் தமிழ்ப்புத்தாண்டின் நமது உறுதியாக வேண்டும்.
தந்தை பெரியாரின்
பகுத்தறிவு – சுயமரியாதை – மாந்தநேயம்
எனும் கொள்கைகள், இன்றைய சூழலில் இன்னும் தீவிரமாக சமூகத்தில் வேரூன்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
கடவுள், மதம், சாதி பெயர்களால் மனிதன் மனிதனை அடக்கும் அமைப்புகளுக்கு
இந்தத் தை பிறப்பு ஒரு சவாலாக அமைய வேண்டும்.
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம்,
இனிவரும் காலத்திலும் மாந்தநேய அரசியல், சமூகநீதி, தொழிலாளர் உரிமைகள்ஆகிய துறைகளில்தன் போராட்டங்களை அதன் தொடர்புடைய இயக்கங்களோடு இணைந்து இடையறாது தொடரும்என்பதையும் இந்நாளில் உறுதி செய்கிறது.
இந்தத் தமிழ்ப்புத்தாண்டு 2057 – பொங்கலில் மூடநம்பிக்கைச் சிந்தனைகளிலிருந்து விடுபெறும் ஆண்டாகவும், அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் ஆண்டாகவும், தொடர்ந்து சுயமரியாதையை உயர்த்தும் ஆண்டாகவும் மலர வேண்டும் என்று விரும்புகிறேன்.
உழைப்பைப் போற்றுவோம்!
பகுத்தறிவை வளர்ப்போம்!
மாந்தநேயத்துடன் நல்ல மாந்தராக வாழ்வோம்!
அனைவருக்கும் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு 2057 –தைத் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்!
மானமிகு, நாக. பஞ்சு AMN.,
தேசியத் தலைவர்
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம்


