
2057 திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு பன்னாட்டுத் தமிழ்ச் செய்தியாளர்களைச் சந்தித்த கவிப்பேரரசு வைரமுத்து கீழ்கண்டவாறு செய்தியாளர்களிடம் பேசினார்.
“உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்”.
இந்த நல்ல நாளில் தமிழ்நாட்டில்
மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்ட தமிழ்நாட்டு அரசுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருக்குறளை வாசிப்பதைவிட திருக்குறளின்படி வசிப்பது முக்கியம் என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று உலகத் தமிழர்களை நாங்கள் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நல்ல திருநாளில் நான் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைக்கிறேன்
இந்தியாவின் தேசிய இனங்களின் தாய் மொழிகள் எல்லாம் மதிக்கப்பட வேண்டும். தமிழ் மட்டும் மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. எங்கள் தாய் மொழியை நாங்கள் பேணுவது மாதிரியே, இந்தியாவின் எல்லா தேசிய இனங்களும் தத்தம் தாய்மொழியை பேண வேண்டும்; மதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இந்த நேரத்தில் சாகித்திய அகாதமி பரிசு குறித்து ஒரு கருத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
சாகித்திய காதமி விருது, இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதில் ஒரு சிக்கல் இருப்பதாக அறிவுலகம் அஞ்சுகிறது.
இதுவரைக்கும் கலாச்சாரத்துறை என்று சொல்லக்கூடிய ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறையின் கீழே சாகித்திய அகாடமி இயங்கி வருகிறது.
கடந்த 72 ஆண்டுகளாக; ஆனால் சாகித்ய அகாடமி ஒரு தன்னாட்சி அமைப்பாக திகழ வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து ஆணையிடப்பட்டு இயங்கி வந்தது.
ஆனால், இப்பொழுது அதை ஒன்றிய அரசின் பண்பாட்டுத்துறை, தன்கீழ் கொண்டு வர வேண்டும் என்று கருதுவதாக எங்களுக்கு தோன்றுகிறது.
அதனால், சாகித்திய அகாதமியின் தன்னாட்சி என்ற உரிமை பறிக்கப்படுவதாக இந்தியாவின் எல்லா மொழியினரும் கருதுகின்றனர்.
இது படைப்பாளிகளுக்கு, படைப்பாளிகளின் சுதந்திரத்திற்கு எதிரானது என்று அறிவுலகம் கருதுகிறது. இலக்கியவாதிகள் கருதுகின்றனர்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பும்படியும் கேள்வி எழுப்பும் படியும் நான் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, தமிழச்சி தங்கபாண்டியன், ரவிக்குமார், சு. வெங்கடேசன் ஆகியோரிடம்
சாகித்ய அகடாமியின் சுதந்திர செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படுவதன் தொடர்பில் நான் என் கவலையை.., எங்கள் கவலையை தெரிவித்திருக்கிறேன்.
நாடாளுமன்றம் கூடும் பொழுது இது பற்றிய கேள்வியை எழுப்பி இந்திய தேசிய மொழிகளின் உரிமைகளை மீட்டு த் தருமாறு நான் அவர்களிடம் கோரிக்கை வைத்திருக்-கிறேன். அவர்களும் கனிவோடு இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
எனவே இந்த திருவள்ளுவர் திருநாள் தமிழுக்கு மட்டும் அதிகாரம் பெற்று தராமல் இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் அதிகாரம் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறது
முன்வைக்கிறது.
வாழ்க திருவள்ளுவர்!
வளர்க திருக்குறள்!! வெல்கு தமிழர்கள்!!!
நன்றி; வணக்கம்..
என நகைமிகு முகத்தோடும் சிலிர்த்த உள்ளத்தோடும் பொங்குதமிழ் வாஞ்சையுடனும் செய்தியாளர்களிடம் பேசினார் வைரமுத்து.
தகவல்: வேதா


