Thursday, April 2, 2026

பாதுகாப்பான- தூய்மையான- அமைதியான தைப்பூசத்தைக் கொண்டாடுவோம்! -மமுக தலைவர்

மக்கள் முற்போக்குக் கட்சி (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோகா பால மோகன், தைப்பூசத்தை முன்னிட்டு அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக இந்துக்களுக்கு, தனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த திருநாளின் போது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, ஒழுக்கம் மற்றும் சுத்தம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தைப்பூசம் என்பது நம்பிக்கை, தியாகம் மற்றும் ஆன்மீக நிறைவு ஆகியவற்றை குறிக்கும் முக்கியமான திருநாள் என்று அவர் தெரிவித்தார்.

“நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்கள், குறிப்பாக கோலாலம்பூரில் உள்ள பத்துமலை, பினாங்கு தண்ணீர் மலை, ஈப்போவில் உள்ள கல்லுமலை ஆகிய இடங்களில், தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்ற வரும் பக்தர்கள், பொதுமக்களால் பெரும் கூட்டம் திறலும்” என்று அவர் கூறினார்.

கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில், விழா சீராகவும் ஒழுங்காகவும் நடைபெற, பக்தர்களும் யாத்திரிகர்களும் தேவையான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சாலை ஓரம் நடக்கும்பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளை அழைத்துவரும் பக்தர்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

நேர்த்திக்கடன் நிறைவேற்ற வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படியும் கூட்ட மேலாண்மையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் முழு ஒத்துழைப்பு வழங்கும்படியும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக சுத்தத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குப்பைகளை குறிப்பிட்ட குப்பைத் தொட்டிகளில் மட்டும் போடுங்கள். குப்பையை கண்டபடி எறிந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டாம் என்று அவர் மேலும் கூறினார்.

தைப்பூச திருநாள் அனைத்து மலேசியர்களுக்கும் ஆசீர்வாதம், ஒற்றுமை மற்றும் வளப்பத்தைக் கொண்டுவர வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாப்பான, சுத்தமான மற்றும் அமைதியான தைப்பூசத்தை கொண்டாடுவோம்” என்று டத்தோ லோக பாலமோகன் வெளியிட்டுள்ள தைப்பூச வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை