Thursday, April 2, 2026

பத்து மலையை நோக்கிய வெள்ளித் தேரின் பயணம் தலைநகரில் நிலை குத்தி உள்ளது!

2026 தைப்பூச திருநாளையொட்டி இன்று ஜனவரி 30 வெள்ளி இரவு 10 மணி அளவில் தாய் கோயில் கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட வெள்ளித் தேர் பக்தர்கள் புடை சூழ வெள்ளி ரதம் புறப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேருக்கு முன்னும் பின்னும் நடந்து வருவதால் தேரின் பயணம் தலைநகரில் நிலை குத்தியுள்ளது.

முன்னதாக பிற்பகல் அளவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்தார்.

அவருக்கு தேவஸ்தானம் சார்பில் உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது. டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா பிரதமருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன், ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யூனிஸ்வரன், மஇகா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தைப்பூச ஏற்பாடுகள் குறித்து பிரதமருக்கு டான்ஸ்ரீ நடராஜா விளக்கம் அளித்தார்.

பின்னர் பத்துமலை திருத்தலத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அவர் பார்வையிட்டார்.

தைப்பூச திருவிழா அமைதி மற்றும் சிறப்பான முறையில் நடைபெற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தன் விருப்பத்தை தெரிவித்தார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை