
மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவு-மித்ரா (MITRA) நிதி விவகாரம் தொடர்பில் தான் அவதூறு பரப்பியதாகக் கூறி, மலேசிய இந்திய காங்கிரஸ்- மஇகா தலைவர்கள் ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மஇகா தலைவர் தான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்-வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் உள்ளிட்ட 7 முக்கியத் தலைவர்-கள் ‘பெர்சத்துவான் ஜாலினான் பெர்பாடு -வான் நெகாரா மலேசியா’ (Persatuan Jalinan Perpaduan Negara Malaysia) என்னும் அரசு சாரா அமைப்பின் தலைவர் சையது இம்ரான் சையது அப்துல் அஜீஸ் (Syed Imran Syed Abdul Aziz). மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மித்ரா நிதி உதவி குறித்து டிக்டாக் (TikTok)
வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட மூன்று காணொளிகள் மஇகா தலைவர்கள்மீது அவதூற்றை ஏற்படுத்தியதாகக் கூறி ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் இன்று ஊடகத்தினரை சந்தித்த சையது இம்ரான் சையது அப்துல் அஜீஸ், ஒரு மலேசியன் என்னும் அடிப்படை-யில் சமூக நோக்கோடு கருத்து தெரிவித்தேனேத் தவிர, யார் மீதும் அவதூறு ஏற்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று குறிப்பிட்டார்.


