
கந்த நாயகன் திருமுருகப் பெருமானுக்குரிய தைப்பூசத் திருவிழா, இவ்வாண்டும் வழக்கமான ஆன்மிகப் பெருக்குடனும் சமய நெறியோடும் கொண்டாடப்பட்டது.
பத்துமலை திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய வேளையில், தாய்க் கோயில் கோலாலம்பூர் அன்னை அருள்மிகு மாரியம்மன் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டு சென்ற போதும் அதைப்போல பத்துமலையில் இருந்து திரும்பியபோதும் பொதுமக்கள் தண்ணீர் பந்தலை அமைத்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் குளிர் பானமும் வழங்கினர்.

தேர் திரும்பியபோது தேரில் வீற்றிருந்த முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரருக்கு ஏராளமான தேங்காயும் உமா ராணி வர்த்தக குழுமத்தில் சார்பில் உடைக்கப்பட்டன.
அந்த வகையில் ஜாலான் ஈப்போ 4 ஆவது மைல் பகுதியை வெள்ளி ரதம் அடைந்தபோது புகழ்பெற்ற உமாராணி குழுமத்தின் சார்பில் அதன் நிர்வாக இயக்குனரும் மஇகா தேசிய தகவல் பிரிவுத் தலைவருமான டத்தோ இராமலிங்கம் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மஇகா தேசிய ஊடகப் பிரிவின் தலைவர் எல்.சிவசுப்பிரமணியனும் டத்தோ இராமலிங்கத்துடன் இணைந்து வழிபாடு செய்தார்.



