Tuesday, February 17, 2026

சுற்றுலாவிற்கு வந்து கடப்பிதழைத் தொலைத்து பரிதவித்த தமிழ்நாட்டு மாணாக்கர்: உடனே உதவிய ‘திராவிட மாடல்’ முதல்வர் மு க ஸ்டாலின்!!களத்தில் அதிரடியாக இறங்கிய மல்லை சத்தியா!!!

சென்னை MOP வைஷ்ணவ பெண்கள் கல்லூரி மாணவிகள் 30 பேர் கடந்த 30 01 2026 வெள்ளிக்கிழமை இரவு 11:45 மணியளவில் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியாவிற்கு கல்விச் சுற்றுலா சென்றனர். பல்கலைக்கழக கருத்தரங்கம் முடிந்து நேற்று 04 02 2026 புதன்கிழமை இரவு மலேசிய நேரப்படி இரவு 9:30 மணியளவில் சென்னை திரும்ப திட்டமிட்டு இருந்த நிலையில் மாணவி காவியா சரத் MBA முதலாம் ஆண்டு மாணவி தன் கடவுச் சீட்டைத் -PASSPORT தவற விட்டு பரிதவித்து கொண்டு இருந்த நிலையில் அவரின் நிலை குறித்து அதேக் கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு பயிலும் மாணவர் பிரேனேஷ் எனக்கு தகவல் சொல்லி உதவிடக் கோரினார்.

இந்தத் தகவலை உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் பொற்கால ஆட்சியின் நாயகன் அண்ணன் தலைவர் திரு தளபதி அவர்களின் கவனத்-திற்குக் கொண்டு சென்றேன்
.
அடுத்த சில நிமிடங்களில் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மலேசிய நாட்டில் இயங்கும் இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்து கடவுச் சீட்டை தவறவிட்ட மாணவி காவியா சரத்திற்கு உதவிட அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழ் நாட்டு அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியத் தூதரக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவி காவியா சரத்தை தொடர்பு கொண்டு அலுவலக நடைமுறைகளை முடித்து நான்கு மணி நேரத்தில் புதிய கடவுச் சீட்டு PASSPORT வழங்கி தமிழ் நாட்டிற்குத் திரும்ப உதவியுள்ளனர் இந்திய தூதரக அதிகாரிகள்.

பல்வேறு பணிகளுக்கு இடையேயும்
மாணவி காவியா சரத் தாயகம் திரும்ப, தாய் உள்ளத்தோடு உதவிய மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் திராவிட மாடல் பொற்கால ஆட்சியின் நாயகன் அண்ணன் தலைவர் தளபதி அவர்களுக்கும் இந்திய தூதரகத்திற்கும் நன்றி.

ஏர் ஏசியா விமான நிறுவன மேலாளர் சீனிவாசன், ஏர் ஏசியா விமான நிறுவனங்களின் உயர் அதிகாரி
கேசவன் சிவானந்தனிடம் பேசி மனிதாபிமான அடிப்படையில் மாணவி காவியா சரத் மற்றும் பானு இருவருக்கும் ஒருவழி பயணச் சீட்டை, கட்டணம் இல்லாமல் வழங்கி உதவியுள்ளனர்.

ஏர் ஏசியா விமான உரிமையாளர் மேன்மை-மிகு டோனி பெர்னாண்டசிற்கும் இவ் வேளையில் நன்றி .

ஏர் ஏசியா விமான மேலாளர் சீனிவாசன், மாணவி காவியா சரத், பானு இருவரையும் பாதுகாப்பாக தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று இரவு தங்கவைத்து காலை விமான நிலையம் அழைத்து வந்து குடியுரிமை பணிகள் முடித்து நாடு திரும்ப உதவி-யுள்ளார்; அவருக்கும் நன்றி.

சோதனையான காலக்கட்டத்தில் மாணவிக்கு ஆறுதலாக இருந்த மலேசிய நாட்டின் திமுக அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் திரு ஃபிர்தாவுஸ் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் குழு தலைவர் பெருந்தமிழன் பெ.ராஜேந்திரன்,
கண்ணன், முத்துவேல் உள்ளிட்ட உறவுகளுக்கும் நன்றி

என்றென்றும் மறுமலர்ச்சிப் பாதையில்

மல்லை சி ஏ சத்யா
தலைமை ஒருங்கிணைப்பாளர் திராவிட வெற்றிக் கழகம்

மல்லைத் தமிழ்ச் சங்கம்;
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்(ஆசியா)
05 02 2026

Made with LogoLicious Add Your Logo App

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை