Saturday, May 2, 2026

‘இந்துக்கள் கொல்லப்படுகின்றனர்’: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டுவதாக பிரதமர் அன்வார் அதிர்வேட்டு! யார் அந்த முன்னள் அமைச்சர்? பெயரைச் சொல் அல்லது திரும்பப்பெறு:-பொன்.வேதமூர்த்தி எதிர்வேட்டு!!

தன்மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் அபாண்ட முறையிலும் சாடைப் பேச்சு என்னும் சுட்டுமொழியிலும் அவதூறு புரிந்துள்ள பிரதமர் அன்வார், 48 மணி நேரத்தில் அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி கெடு விதித்துள்ளார்.

“ஒரு முன்னாள் அமைச்சர் இனவெறியைத் தூண்டும் விதமாக பேசியுள்ளார்; மலேசிய-வாழ் இந்துக்கள் தங்கள் மதத்தை கடைப் பிடிக்க அனுமதிக்கப் படவில்லை; அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். மேலும் பிரதமர் பிற இனங்களின் உரிமைகளை கேள்வி எழுப்புகிறார்” என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த-தாக The Star.com என்னும் ஆங்கில இணைய தளத்தில் நேற்று தகவல் வெளியிடப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையா-னவை. தவிர, இனவெறியைத் தூண்டுதல், மதச்சார்பான குற்றச்சாட்டு, தேசிய பாது-காப்பு-பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஆகிய-வற்றைக் குறிக்கின்றன. பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய குற்றச்-சாட்டுகளை முன்வைத்தால், அது அரசியல் கருத்தாக அமையாது; சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய உண்மையான குற்றச்சாட்டாகும்.

“பிரதமர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் சூழல் மற்றும் உள்ளடக்கத்தில் இருந்து, அவர் குறிப்பிட்ட ‘முன்னாள் அமைச்சர்’ நான்தான் என்பது தெளிவாக உள்ளது. அது உண்மையாக இருந்தால், பிரதமர், தன்மீது மிகக் கடுமையான குறச்சாட்டை முன்வைத்-துள்ளார்”.


ஒரு முன்னாள் அமைச்சரை “இன வெறியைத் தூண்டினார், மத அடக்குமுறை மற்றும் கொலை குற்றச்சாட்டுகளைப் பரப்பினார்” என்று குற்றம் சாட்டுவது சாதாரணமாகச் சொல்லக்கூடிய விசயம் அல்ல. பிரதமரின் குற்றச்சாட்டு உண்மை-யாக இருந்தால், மலேசிய சட்ட அமலாக்கத் தின்படி இது பெருங்குற்றமாகும்; அதன்படி, காவல்துறை கைதுசெய்து விசாரணை நடத்தி வழக்கும் தொடர வேண்டும். ஆனால் அது உண்மையல்ல என்றால், பிரதமர் கூறியவை பொறுப்பில்லாத அவதூறு; அதிகார துஷ்பிரயோகம்; ஆதாரமின்றி ஒருவரின் கண்ணியத்தையும் நற்பெயரை-யும் கெடுக்க முயற்சி செய்ததாகக் கருதப் படும்.


பிரதமர் பதவி வகிக்கும் ஒருவர் தெளிவு இல்லாமல் குற்றம் சாட்டுவதும் அரசியல் அச்சத்தால் சாடைமொழி அல்லது சுட்டு- மொழியில் பேசுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் பதவி என்பது மேன்மை, துல்லியம், கட்டுப்பாடு, கடப்பாடு, பொறுப்-புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது.

• பிரதமர் குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் தான்தான் எனத் தெளிவாகவும் நேரடியாக-வும் அறிவிக்க வேண்டும்.


• அவர் குறிப்பிடும் முன்னாள் அமைச்சர், தான்தான் என்றால், பிரதமர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வெளிப் படுத்த வேண்டும்

.
• சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் தான் அல்லர் என்றால், அந்த முன்னாள் அமைச்சரின் பெயரை பிரதமர் அன்வார் வெளியிட வேண்டும்.

எனவே, பிரதமருக்கு 48 மணி நேர அவகாசம் அளிக்கிறேன் என்று நேற்று பிப்ரவரி 09-ஆம் நாள் பிற்பகல் 3:30 மணி அளவில் ஆங்கில மொழியில் வெளியிட்ட அறிக்கையில் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமுர்த்தி காலக்கெடு விதித்துள்ளார்.

வழக்கமாக 24 மணி நேரம் போதுமானது. ஆனால் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும் சட்டரீதியான விளைவுகளையும் கருத்தில் கொண்டு, பிரதமர் தன் சட்ட ஆலோசகர்-களுடன் ஆலோசிக்க கூடுதலலாக 24 மணி நேரம் வழங்குகிறேன் என்று பொன். வேதமூர்த்தி தாராளத் தன்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

மலேசியாவிற்கு உண்மையின் அடிப்படை-யிலும் ஆதாரங்களால் உறுதிப் படுத்தப்பட்ட தலைமைதான் தேவையேத் தவிர அச்சமோ, சாடைப்பேச்சோ அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டோ அல்ல என்றும் 48 மணி நேர காலக்கெடு இப்பொழுது தொடங்குகிறது என்று நேற்று 2026 பிப்ரவரி 9-ஆம் நாள் 3:30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் சட்ட வ்ல்லுநருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை