Thursday, April 30, 2026

பாஸ், பெர்சத்து, அம்னோ கட்சிகளுக்கு பொன்.வேதமூர்த்தி அறைகூவல்!

அன்வார் இப்ராகிம் வகிக்கும் பிரதமர் பதவி-யின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்-கொண்டு, அரசியல் சாசனத்தின் மேன்மை-யைக் காப்பாற்ற வேண்டுமா அல்லது போலியான மத-இன பிரச்சினைகளில் சிக்கிக் அன்வாரின் அரசியல் சதுரங்கத்தில் பலியாக வேண்டுமா என்பதை பாஸ், பெர்சத்து, அம்னோ கட்சிகள் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது; குறிப்பாக, அன்வாரின் தந்திர சிந்தனைக்கும் மிகப் பெரிய அரசியல் ஏமாற்று நடவடிக்கைக்கும் ஆட்பட வேண்டாம் என்று இம்மூன்று கட்சி-களின் உயர்மட்டக் குழுக்களுக்கு மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன். வேதமுர்த்தி வெளிப்படையாக வேண்டு-கோள் விடுத்துள்ளார்.

இந்த மூன்று கட்சிகளும் ஒரு கசப்பான உண்மையை உணர வேண்டிய நேரமிது. இப்போது தேசிய அரசியலை மையமிட்டு அதிகரித்துவரும் இனம் மற்றும் மத அடிப்படையிலான சர்ச்சைகள் யாவும் அன்வார் வகிக்கும் பிரதமர் பதவி, அரசியல் சாசனத்தின்படி சட்டப்பூர்வமானதா என்ற சந்தேகம் அதிகரித்து வரும் நிலையில், அந்த நெருக்கடியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் திசைதிருப்ப நடவடிக்கையாகும், இது.

கடந்த ஒரு மாதத்தில், இந்து கோவில்கள் தொடர்பான பிரச்சினை திடீரென்று பெரும் தாக்கத்துடன் எழுப்பப்படும் அதேவேளை, ‘கோவில் ஹராம்’ என்ற பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டும் பன்றிப் பண்ணை தொடர்பான சிக்கலும் மலாய் முஸ்லிம்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்-களிடையே ஆழ்ந்த கவலையையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்து-கின்றன.


இந்த இரண்டு விசயங்களும் திட்டமிட்ட அரசியல் நாடக நடவடிக்கையாகும்.

அதற்கும் மேலாக, “அன்வார் இப்ராகிம், என்னை ஒரு தீவிரவாதி (pelampau) என்றும் இந்து கோவில்களுக்காக அநியாயமான கோரிக்கைகளை முன்வைக்கிறேன் என்றும் இந்துக்கள் போலீஸ் காவலில் கொல்லப்-பட்டனர் என்று சொன்னதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மலாய் அரசியல் கட்சிகளிடையே ‘இஸ்லாத்தின் எதிரி’ என்னும் அச்சத்தை உருவாக்கியுள்ளார்”.

அன்வார் வகிக்கும் பிரதமர் பதவியின் சட்டப் பூர்வத்தன்மை குறித்து தற்பொழுது பரவ-லாக பேசப்படுவதால் அன்வார்மீது எழுந்துள்ள அழுத்தம் அதிகரித்து வருகிறது; இத்தகைய அரசியல் நெருக்கடி அவரின் அரசியல் எதிரிகளிடமிருந்து மட்டுமல்லாமல் நாட்டின் அரசியல் சட்ட அமைப்பிலிருந்தும் எழுகிறது.

  1. அன்வார் இப்ராகிம் பிரதமராக தொடர்வதற்-கான சட்டப்பூர்வத்தன்மை, அரசியல் சாசன ரீதியிலான தகுதி, தார்மீக அதிகாரம், பிரத-மர் நியமனத்தின்போது நிலவிய சட்ட சூழ்-நிலைகள் உள்ளிட்ட கேள்விகள் தற்பொழுது தேசிய அளவில் அலசப்படுகின்றன.
  1. அன்வார் இப்ராகிம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன், அரசியல் சாசன விதிகளைப் பின்பற்றாமலும் மாமன்னர்-ஆட்சியாளர் மன்றம்-அமைச்சரவை-நாடாளுமன்றம் ஆகியத் தரப்பினரை புறக்கணித்தும் தன்னிச்சையாக ஒப்பந்தம் செய்தது அரசியல் சாசனத்தை மீறிய செயல் மட்டுமல்ல; மலேசிய இறையாண்மைக்கும் கலங்கம் கற்பிக்கக்கூடியது;
  2. இதன் விளைவாக, அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாட்சிமைக்குரிய மாமன்னர் மற்றும் ஒன்பது மலாய் ஆட்சியாளர்களுக்கான அதிகாரத்தின்மீது நிழல்படிந்து, மலேசிய அரசியல் சாசனத்தின் மேன்மையும் நாடாளுமன்ற ஜனநாயகமும் பாதிக்கப்படலாம்.

15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின் பிரதமர் நியமனத்தின்போது, முன்னாள் மாமன்னர், அன்வார் இப்ராகிமின் தகுதி குறித்த தவறான தகவலால் வழிநடத்தப் பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் தற்பொழுது எழுந்துள்ளன.

மேலும், யூசுஃப் ராவுத்தர் தொடர்பான போதைப்பொருள் மற்றும் போலித் துப்-பாக்கி தொடர்பான வழக்கு, சபா நிலப்பரப்பு இந்தோனேசியாவுக்கு ஒப்படைக்கப்பட்ட-தாகக் கூறப்படும் விவகாரம், “no man’s land” என்ற பொய்யான கதை, AMBALAT பிரச்-சினை, மற்றும் அமெரிக்க நீதித் துறை- DOJ ஆவணங்களில் எஃப்ஸ்டீன் தொடர்பான வெளிநாட்டு தலையீடு குறித்த குற்றச்சாட்டு-கள் இவை யாவும் பிரதமரின் நம்பகத்-தன்மைக் குறித்தும் நிருவாக வெளிப்-படைத்தன்மை பற்றியும் கேள்வி எழுப்பு-கின்றன.

இவைதான் நாட்டைச் சுழ்ந்துள்ள உண்மை-யான நெருக்கடி. அன்வார் இப்ராகிம், இந்தப் பிரச்சினைகளை மறைக்க, பன்றி வளர்ப்பு மற்றும் இந்து கோவில்கள் தொடர்பான பிரச்சினைகளை திரைக்குப் பின்னால் உள்ள மறைமுக முகங்கள் மூலம் எழுப்பி மத-இன உணர்வுகளை அரசியல் ஆயுத-மாக்கி, மலாய்-இஸ்லாம் உரிமைகளுக்கான அச்சுறுத்தலாக சித்திரிக்கிறார்.

இந்து கோவில்கள் தொடர்பான பிரச்சினை, மலாய் உரிமை அல்லது இஸ்லாத்திற்கு எதிரான சவால் அல்ல; 1970-80 காலக்-கட்டத்தில் ஏறக்குறைய 8 இலட்சம் இந்திய தோட்டத் தொழிலாளர்கள் நகர்ப்பகுதிக்கு கட்டாயமாக இடம்பெயர வைக்கப்பட்டது மற்றும் தோட்ட நிலங்கள் தனியார்மய-மாக்கப்பட்டதன் விளைவாக உருவான சட்டப்பூர்வ சிக்கலாகும்.

பல கோவில்கள் சுதந்திரத்திற்கு முன்பே உருவாக்கப்பட்டு இருந்தாலும் அவற்றின் இடம் தொடர்பான சட்ட சிக்கல் சுதந்திரத்-திற்கு முந்தைய மலாயாவிலும் சுதந்திர மலேசியாவிலும் தீர்க்கப்படவேயில்லை; அதேபோல், பன்றி வளர்ப்பும் சுதந்திரத்-திற்கு முன்பே இருந்தது; இது ஒழுங்குமுறை பிரச்சினை மட்டுமேத் தவிர அச்சுறுத்தல் அல்ல. இவற்றை ஊதிப் பெரிதாக்கி, மலாய்-முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் ஆபத்தில் உள்ளதாக காட்சிப்படுத்துவது, அன்வார் இப்ராகிமின் அரசியல் வாழ்வைக் காப்பாற்றும் திட்டமிட்ட முயற்சியாகும்.

பாஸ், பெர்சத்து, அம்னோ கட்சிகள் இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்:

மாமன்னர்-ஆட்சியாளர் மன்றம் உள்ளிட்ட அரசக் கட்டமைப்பு, மலாய் மேன்மை, அரசியல் சாசனத்தின் உன்னதம், மலேசியாவின் இறையாண்மை மற்றும் தேசிய நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் இருந்து வேண்டுமென்றே கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு மாயக் கட்டமைப்பால் தாங்கள் திட்டமிட்டு கவரப்படுகிறோம் என்பதை இந்த மூன்று தேசியக் கட்சிகளும் உணர வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான போன். வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய நலனை முன்னிறுத்தி மேலே குறிப்பிடப்பட்டவற்றைப் பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமே அல்லாமல், 16-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் பிரதமரின் அரசியல் உய்விற்கும் அவரின் நீண்டகால அதிகார ஒருங்கிணைப்புக்கும் தங்களை அறியாமல் துணைபோகும் போக்கிலிருந்து பாஸ், பெர்சத்து, அம்னோ கட்சிகள் விலகி இருக்க வேண்டும்.

இந்து கோயில்கள் சட்ட விரோதமானவை என்று ஒவ்வொரு முறையும் நீங்களெல்லாம் எதிரொலிக்கும்பொழுதும் அதைப்போல அரசியல் சாசனத்திற்கும் நாட்டின் இறை-யாண்மைக்கும் களங்கம் நேரும்பொழுது பன்றி வளர்ப்பு குறித்து பேசுவதும் அரசக் கட்டமைப்பு, மலாய் மேன்மை, அரசியல் சாசனத்தின் உன்னதம், மலேசியாவின் இறையாண்மை ஆகியவற்றுக்கு மருட்டல் எழும்பொழுதெல்லாம் அமைதி காப்பதும் அன்வாரின் கரங்களை வலுப்படுத்தவே உதவும் என்பதை பாஸ், பெர்சத்து, அம்னோ கட்சிகள் உணர வேண்டும்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கான அன்வாரின் அரசியல் வியூகம் மிகவும் தெளிவானது; நம்பிக்கை கூட்டணியின் உறுப்புக் கட்சி-யான ஜசெக மூலம் சீன வாக்குகள் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன்; அதைப்போல, பெரிக்காத்தான் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பாஸ் கட்சியின் கை ஓங்கிவிடும் என்று அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்திய வாக்குகளை வசப்படுத்தி விடலாம். ஆனால், பாஸ்-பெர்சத்து-அம்னோ கட்சி-களின் மூலம் பிரிந்துள்ள மலாய் முஸ்லிம் வாக்குகளைக் கவரவே மத பதற்றம் செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது.

எனவே, இந்த மூன்று கட்சிகளும் அன்வார் இப்ராகிம் தலைமையின் சட்டப்பூர்வத்-தன்மையை எதிர்கொண்டு, அரசியல் சாசனத்தின் மேலான்மையையும் நாட்டின் இறையாண்மையையும் நிலைநிறுத்த வேண்டுமா அல்லது போலியான மத-இன பிரச்சினைகளில் சிக்கிக் பிரதமரின் அரசியல் நகர்வுக்கு பலியாக வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக சட்ட வல்லுநருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வாருக்கு அவர் விதித்த 48 மணிநேர கெடு நேற்று பிப்ரவரி 11-ஆம் நாள் 3:30 மணியுடன் முடிவடைந்த அதேநேரத்தில் இத்தகைய அரசியல் அறிக்கையை வெளியிட்டு, வரலாறு குறிக்கோளைக் கருதாமல், விளைவுகளையே மதிப்பிடும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை