
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று, மார்ச் 21 சனிக்கிழமை பத்துமலை ஷாங்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
இந்த விழாவில் மூத்த பத்திரிகையாளர்கள்-மூத்த பணியாளர்கள் 15 பேருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் தலைமையில் இந்த சிறப்பு நிகழ்ச்சி இடம் பெற்றது.
இந்த விழாவில் மக்கள் ஓசை புகைப்பட கலைஞர் பி.மலையாண்டி, தமிழ் மலர் ஆசிரியர் கு.தேவேந்திரன், ஆர்டிஎம் செய்தியாளர் பிரேம் ஆனந்த், ஹேமந்த குமார், புகைப்பட கலைஞர் மூர்த்தி ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
மலேசிய நண்பன் மூத்த செய்தியாளர் ஜீவா, சிரம்பான் நிருபர் துர்க்கா, திருமதி அமுதா, மக்கள் ஓசை சார்பில் யோகேஸ்வரன், மக்கள் ஓசை இணைய தள ஆசிரியர் திருமதி தோ.அ. புவனேஸ்வரி, திருமதி சாந்தி ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
தமிழ் நேசன் சார்பில் மூத்த நிருபர் ரவி முனியாண்டி, திருமதி ராகினி, திருமதி தனவதி, ஆனந்தன் ஆகியோர் சிறப்பு செய்யப்பட்டனர்.


