Monday, April 20, 2026

அதிகார அத்துமீறல்-ஊழல் ; முகைதீன்மீது விசாரணை நடத்த நீதிமன்றம் ஆணை!

கோலாலம்பூர், ஜன.16:
நாட்டின் 8-ஆவது பிரதமராக 2020 மார்ச் தொடக்கத்தில் பதவியேற்ற டான்ஸ்ரீ முகைதீன் யாசின், சுமார் ஒன்றரை ஆண்டு காலம் பொறுப்பு வகித்த காலத்தில் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டதாக 4 வழக்குகளும் கையூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக 3 வழக்குகளும் தொடரப்பட்டு இருந்தன.

அரசத் தரப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நீதி-சட்ட முயற்சிக்கு செசன்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நீதிமன்ற நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும் நோக்கில் இந்த வழக்குகள் யாவும்
கிரிமினல் நடைமுறைச்சட்டம் 165-இன்படி ஒரு சேர விசாரிக்கப்படும் என்று நீதிபதி அசுரா அல்வி வெளியிட்ட வாய்மொழி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை