Saturday, June 6, 2026

16-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிறோம்:-டத்தோசிறீ தனேந்திரன்

மஇகாவுடன் இணைந்து செயல்பட மக்கள் சக்தி கட்சி தயாராக இருப்பதாக
டத்தோஸ்ரீ தனேந்திரன் அறிவித்தார்.

மஇகா கட்சியுடன் இணைந்து அண்மைக் காலமாக செயல்படும் மக்கள் சக்தி கட்சி, தொடர்ந்து அவ்வண்ணமே பயணிக்கத் தயாராக இருக்கிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் உறுதியாகத் தெரிவித்தார்.

ஒன்றாய் வெல்வோம் என்ற தாரக மந்திரத்துடன் மஇகாவுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயார்.

இந்த நாட்டில் 65 ஆண்டுகளுக்கு மேலாக மஇகா இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்றி வருகிறது. தற்பொழுது மீண்டும் மஇகா மாபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த தேர்தல்களில் நம்மை தோற்கடித்தார்கள். இப்போது அவர்கள் வருத்தப்படுகிறார் கள்.

நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும். ஆகவே இந்திய சமுதாயத்தின் நலம்கருதி மஇகாவுடன் கரம் கோக்கிறோம்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்குவோம்.

அண்மையில் கெடா மாநிலத்தில் மாவீரர் ராஜேந்திர சோழன் சிலையை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

அடுத்ததாக பினாங்கு பட்டர் வொர்த்தில் அருள்மிகு கெங்காதரன் சிவபெருமான் ஆலயத்தை பிரமாண்டமான முறையில் கட்டி முடிக்க உறுதி கொண்டுள்ளோம் என்று அவர் சொன்னார்.

போர்ட்டிக்சன் பாசிர் பாஞ்சாங் ‘லோங் சேண்ட்’ மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சக்தி கட்சியின் ஒன்றாய் வெல்வோம் ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றிய போது டத்தோஸ்ரீ தனேந்திரன் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை