Saturday, June 6, 2026

முற்போக்குத் தலைவர் டத்தோ லோக பாலமோகன் நீடு வாழ்க!

மக்கள் முற்போக்கு சிந்தனையுடன் கல்வி மறுமலர்ச்சியை தொடர்ந்து வலியுறுத்தி வரும் தலைவரும் மக்கள் முற்போக்கு கட்சி-பிபிபி தலைவருமான டத்தோ லோக பால மோகன் அவர்களுக்குக்கு இன்று பிறந்த நாள்!

மலேசிய கூட்டு சமுதாயத்தில் பொருளாதார சமன்பாடு கல்வித்துறையில் மறுமலர்ச்சி ஆகியவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வரும் இவரின் சேவையும் தொண்டும் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்ல ஒட்டு-மொத்த மலேசிய கூட்டு சமுதாயத்திற்கும் தேவை.

மலேசியாவில் உயர்கல்வி முடித்து வாழ்க்கை வீதிக்கு வருகின்ற ஒரு மாணவர் எவராக இருந்தாலும் தான் சார்ந்த சமயம் இனம் ஆகியவற்றை அடிப்படையிலேயே சிந்திக்கின்ற போக்கு நாடு முழுக்க பிரதி-பலிக்கிறது.

உயர்கல்வி நிலையங்களில் முன்பெல்லாம் தத்துவம் என்ற ஒரு பிரிவு இருந்தது அதில் இளங்கலை முதுகலை பட்டம் எல்லாம் படித்து உன்னத நிலைக்கு உயர்ந்து சமுதாயத்தை வழிகாட்டிய தலைவர்கள் எல்லாம் உண்டு; இன்றைய நாட்களில் அத்தகைய துறையே இல்லாமல் போய் விட்டது.

மாணவர்களிடையே விசால மனப்பான்-மைக்கு பதிலாக குறுகிய எண்ணமும் சமயம் சார்ந்தே சிந்திப்பதும் பல்கி பெருகிவிட்டது.

எதிர்கால மலேசியா, தன் இறையாண்மையை கட்டிக்காத்து கூட்டு சமுதாயத்தின் ஒருமைப்பாடும் ஒற்றுமை உணர்வும் மேலோங்க வேண்டும் என்றால் கல்வி அமைச்சில் பாரியா அளவில் மறு-மலர்ச்சியும் பாடத்திட்ட மறு உருவாக்கமும் தேவை என்பதை டத்தோ லோக பால மோகன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்

இந்தத் தலைவரின் அரசியல் பயணமும் கல்வித் துறை சார்ந்த முயற்சியும் மலேசியாவின் கல்வித் துறையில் புதிய ஒளியூட்டும் முன்னுதாரணமாக விளங்குகிறது.

இவரின் முற்போக்கு சிந்தனை, சமூக முன்னேற்றத்திற்கும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் வழிகாட்டும் விளக்காகத் தொடரட்டும்.

வாழ்வில் ஆரோக்கியம், அமைதி மற்றும் மக்கள் நலனுக்கான புத்தாக்க சிந்தனை யுடன் சாதனைகளும் நிரம்பியிருக்க குமரி நல்லாள் வாழ்த்துகிறாள்!

வாழிய பல்லாண்டு!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை