
பேருந்து ஓட்டுநர்கள், பள்ளி பேருந்து நிறுவன நடத்துனர்கள், மணல் அல்லும் டிப்பர் லாரி ஓட்டுநர்கள் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்திய தொழில் முனைவோரும் ஓட்டுநர்களும் மானிய விலை டீசல் கிடைக்காமல் கலங்கி நிற்கின்றனர் என்று மலேசிய முன்னேற்ற கட்சி- எம்ஏபி தலைவர் பொன் வேதமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இரு வாரங்களுக்கு ஒரு முறை 500 வெள்ளிக்கு டீசல் நிரப்பிக் கொண்டு தங்கள் வாகனத்தின் மூலம் தொழில் புரிந்தவர்கள் தற்போது அதே இரு வார காலத்திற்கு ஆயிரம் வெள்ளி வரை செலவழிக்க வேண்டி உள்ளது.
மற்ற தரப்பினருக்கு சலுகை விலையில் டீசல் விற்பனை செய்யும் பொழுது இந்தியத் தொழில் முனைவோரும் கனரக வாகன உரிமையாளர்களும் மானிய விலையிலான டீசல் கிடைக்காமல் தொழில் பாதிப்புக்கு ஆளாகி தேங்கி நிற்கின்றனர் என்று ஹிணட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டீசல் விலை உயர்வால் தங்களின் தொழில் கட்டணத்தை உயர்த்தினால் சம்பந்தப்பட்ட தரப்பினர் வேற்று தரப்பினரை நாடுவதால் தொழிலும் பாதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கும் இந்திய சமுதாய வாகன உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.

பொதுவாக இந்திய சமுதாயத்தின்மீது பாரபட்சம் காட்டும் மடாணி அரசு, இந்த வகையிலும் இந்திய சமுதாயத்தை புறக்கணிப்பதாகத் தேரிகிறது தெரிவித்-துள்ள முன்னாள் அமைச்சருமான பொன் வேதமூர்த்தி, இதன் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணி அளவில் கோலாலம்பூர் ‘சோகோ’ வர்த்தக வளாகத்திற்கு முன் நடைபெற இரூக்கின்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய சமுதாயத்தினர் திரண்டு வந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார்.


