
ஆலய சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் முயற்சியாக தேசிய ஆலயக் கருத்தரங்கு
பத்துமலையில் நடைபெறும் என்று டத்தோ ந. சிவக்குமார் அறிவித்தார்.
அண்மைக்காலமாக மலேசிய இந்திய சமு-தாயத்தை குறிப்பாக இந்து சமுதாயத்தை ஆட்கொண்டுள்ள ஆலய சர்ச்சைகளுக்கு தீர்வுகாணும் முயற்சியாக தேசிய ஆலயக் கருத்தரங்கு பத்துமலையில் ஏப்ரல் பதி-னொன்றாம் நாள் நடைபெறவுள்ளது.
மலேசியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்க-ளின் மேலாண்மை, சட்ட அம்சங்கள் குறித்த விரிவான புரிதலை வழங்குவதற்காக இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்-பட்டுள்ளது.

தேசிய நிலச் சட்டம், நகர, கிராம திட்டமிடல் குறித்த சட்ட விளக்கம், கோயில்களுக்கான நிலம் உள்ளிட்ட தலைப்புகளில் இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
ஆலயங்களுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம், கட்டமைப்பு குறித்து ஆலயம் நிருவாகத்தி-னர் அதிகமாக அறிந்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தெல்லாம் இந்தக் கருத்த-ரங்கில் ஆலோசிக்கப்படும் என்று மகிமா தலைவருமான தத்தோ சிவகுமார் தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கின் மூலம், ஆலய நிரு-வாகம், நிலச் சட்ட நடைமுறை, குறிப்பாக தேசிய நிலச் சட்டம் தொடர்பான நடைமுறை-கள் குறித்து ஆழமான புரிதலை ஆலய நிருவாகத் தரப்பினர் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.
மேலும், வழிபாட்டுத் தலங்களின் அமை-விடம், மேம்பாடு ஆகியவை ஒழுங்கான, முறையான வழியில் ஊராட்சி நகராட்சி மாநகர் மன்ற அதிகாரிகளால் நிர்ண-யிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது-டன் நகர, கிராம திட்டமிடல் சட்டத்தின் பங்கையும் இந்தக் கருத்தரங்கு வலியுறுத்தவிருக்கிறது.
இந்த கருத்தரங்கு வரும் சனிக்கிழமை(11-04-2026) காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை பத்துமலை அருள்மிகு திருமுருகன் ஆலய மண்டபத்தில் நடைபெறும்.
இந்தக் கருத்தரங்கை, கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவரும், மஹிமாவின் ஆலோசகருமான டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார்.
மலேசிய ஆலய – சமய அமைப்புகளின் ஒருங்கிணைப்புப் பேரவை(மஹிமா), கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானம், கியூமிக் (CUMIG), டிஎஸ்கே அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே ஆலய நிர்வாகத்தினர் பொறுப்பாளர்கள் திரளாக வந்து இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும் என இதன் தொடர்பில் இன்று பத்து மலை ஆலய வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.


