Sunday, April 19, 2026

ரந்தாவ் கம்போங் உலு சாவா பேபி சிவன் ஆலயத்தில் நாளை முனீஸ்வரர் சிவபெருமானுக்கு திருக்குட நன்னீராட்டு விழா

நெகிரி செம்பிலான் மாநிலத்தில்
ரந்தாவ் கம்போங் உலு சாவா ஸ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தில் வால் முனீஸ்வரர் சிவபெருமான் மகா கும்பாபி-ஷேகம் நாளை ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 9:36 மணி முதல் 10:58 வரை மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது என்று ஆலய நிறுவனர் அப்பர் முருகவேல் தெரிவித்தார்.

மலேசியத் திருநாட்டில் பேபி சிவன் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் 52 அடி உயரத்தில் கம்பீரமாக வால்முனி சிவபெரு-மான் சிலை கட்டப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த மகா கும்பாபிஷேகத்தை பிரதிஷ்டா திலகம், கும்பாபிஷேக ரத்னா சிவ ஆகம கிரியை பூஷணம் சிவஸ்ரீ ஆனந்தவர்த்தன அகோர சிவாச்சாரியார் தலைமையில் ஆகம முறைப்படி நடைபெறுகிறது என்று அப்பர் முருகவேல் தெரிவித்தார்.

இதன் தொடர்பில், கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்தக் குடமுழுக்கு விழாவில் நாடு தழுவிய அளவில் 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னம் பரிமாறப்படும் என்று அவர் சொன்னார்.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி என்றும் விழாவிற்கு வரும் பக்தர்கள் போக்குவரத்-துக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் தங்களின் வாகனங்களை முறையாக நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

52 அடி உயரத்தில் கட்டப்பட்டு மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கும் வால்முனி சிவபெருமான் சிலை பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்று அவர் சொன்னார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை