Sunday, April 19, 2026

10 ஏ பெற்ற மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பை வரவேற்கிறோம்!-டத்தோ டாக்டர் லோகபாலா அறிவிப்பு

Spm தேர்வில் 10 ஏ பெற்ற மாணவர்கள் மெட்ரிகுலேஷன் பயில வாய்ப்பு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் பாட்லினா சீடேக் அறிவித்ததை பிபிபி கட்சி பெரிதும் வரவேற்பதாக அதன் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

எஸ்பிஎம் தேர்வில் 10 ஏ பெற்ற மாணவர்கள் விடுபட மாட்டார்கள் என்று பெரிதும் நம்புகிறோம்.

அந்த வகையில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்
.

கல்வி அமைச்சர் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று பிபிபி கட்சி பெரிதும் நம்பிக்கை கொள்கிறது என்று அவர் சொன்னார்.

எஸ்பிஎம் தேர்வில் நன்னெறி பாடத்தில் ஏராளமான மாணவர்கள் தோல்வி கண்டிருப்பதாக கூறப்படும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

எல்லா பாடத்திலும் தேர்ச்சி பெற்ற வேளையில் நன்னெறி பாடத்தில் மட்டும் மாணவர்கள் தோல்வி கண்டது குறித்து கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலக அளவில் எண்ணெய் விலை அதிக அளவு ஏற்றம் கண்டுள்ளது.

இருப்பினும் இப்போது இரண்டு வாரங்-களுக்கு போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் எண்ணெய் கப்பல்கள் வரத் தொடங்கி உள்ளது.

ஆகவே எண்ணெய் விலை மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளது. தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் எண்ணெய் விலை சீராக எல்ல நேரத்திலும் சீராக இருந்தது.

இப்போது எண்ணெய் விலை சீராக இல்லை. டீசல் விலை உயர்வால் சம்பந்தப்பட்ட தரப்பினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று நடைபெற்ற ஊடகவிய-லாளர் சந்திப்பில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிபி கட்சியின் 73 ஆம் ஆண்டு கொண்டாட்டம் இன்று கம்போங் அத்தாப் பிபிபி தலைமையகத்தில் விமரிசையாக நடைபெற்றது.

டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிபிபி கட்சியின் துணைத் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, உதவித் தலைவர்கள் டத்தோ இளையப்பன், டத்தோ இண்டர்ஜிட் சிங், டத்தோ நோவா, செயலாளர் டத்தோ சந்திரா, பொருளாளர் டத்தோஶ்ரீ டல்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் முனிசாமி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை