Wednesday, April 15, 2026

வரலாற்று ஏடுகளில், ஏப்ரல் 15!

இன்றைய தினம். உலக வரலாற்றில் இரு மகத்தான ஆளுமைகள் பிறந்த நாள்!!

லியொனார்டோ டா வின்சி (1452), குருநானக் (1469) ஆகிய இருவரையும் குமரி வான்முறம் இன்று நினைவுகூர்கிறது.

இருவரும் தத்தம் துறைகளில் மனிதகுலத்-தின் சிந்தனை, கலை, ஆன்மீகத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றவர்கள்.

லியொனார்டோ டா வின்சி, இத்தாலியின் வின்சி நகரில் 1452ஆம் ஆண்டில் இதே நாளில் பிறந்தார். அவர் புலவர், ஓவியர், அறிவியலாளர், பொறியியலாளர், இசைக் கலைஞர், தத்துவஞானி என்றெல்லாம் பன்முகப் பாங்கு வாய்ந்தவர்.

மோனா லிசா, தி லாஸ்ட் சப்பர் போன்ற கலைப் படைப்புகள், காலம் உள்ளளவும் லியொனார்டோ டா வின்சியின் புகழ்பாட வல்லவை; அதைப்போல, இயந்திர வடிவமைப்பு, பறக்கும் கருவிகள், நீரியல் ஆய்வுகள், உடலியல் வரைபடங்கள் உள்ளிட்டவை அவரின் அறிவியல் சிந்தைக்கு சான்றானவை.

கலையை, அறிவியலின் வெளிப்பாடாகக் காட்டிய டா வின்சி, மனிதனின் சிந்தனை எல்லையை விரிவுபடுத்தினார்; கலைக்கும் அறிவுக்கும் இடையே பாலம் அமைத்தவர்.

இவரைப் போல, சீக்கியம் என்னும் புது சமயத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவிற்கும் இன்று பிறந்த நாள்(1469).

பஞ்சாப் மாநிலத்தின் தல்வண்டி என்னும் பகுதியில் பிறந்தார். இந்த இடம் இப்-பொழுது பாகிஸ்தானில் நன்கானா சாஹிப் என அறியப்படுகிறது.

கடவுள் ஒருவரே, மனிதர்கள் எல்லோரும் சமம், ஆணுக்கு பெண் இளைப்பில்லை உள்ளிட்ட சிந்தனைகளை மக்களிடையே விதைத்தவர் குருநானக்.

திபெத், அரபு நாடுகள் வரை ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட குருநானக், மனித குல ஒற்றுமையைப் போதித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை