
இஸ்ரேல்–லெபனான் இடையே அறிவிக்கப் பட்ட பத்து நாள் போர் நிறுத்தத்தை ஐ.நா. தலைமைச் செயலாளர், மலேசிய பிரதமர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், லெபனான்- ஹிஸ்புல்லா தரப்பினர் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் இனி உயிர்ப்பலி நிகழா-மல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி-யுள்ளார்.
இந்தக்ட கருத்து சிலரால் விமர்சிக்கப்படும் அதேவேளை, பன்னாட்டு ஊடகங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தி-யுள்ளது.
நேற்று, ஏப்ரல் 16இல் இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ‘ட்ரூத்’ வலை-தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தப் போர் நிறுத்தம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி முயற்சிகளுக்கான குறிப்பிடத்தக்க தொடக்கம் என பன்னாட்டு ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் லெபனான் ஹிஸ்புல்லா தரப்பினர் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து, சிலரால் ஒருதலைப்பட்சமாக பார்க்கப்படுகிறது; ஹிஸ்புல்லா மீது மட்டும் அழுத்தம் கொடுப்பது சமநிலை இல்லாத அணுகுமுறை எனவும் விமர்சிக்கப்படுகிறது.
இஸ்ரேல்–லெபனான் தலைவர்கள் விரைவில் சந்தித்து பெரிய அளவிலான அமைதி ஒப்பந்தம் குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில் அமெரிக்க அதிபரின் இத்தகைய அதிரடி கருத்து அத்துணை பொருத்தம் இல்லை என பன்னாட்டு ஊடகத்தில் விமர்சிக்கப் படுகிறது.


