Sunday, April 19, 2026

இணைந்து தொண்டாற்ற வழிவகுத்த தலைவர்: -தான்ஸ்ரீ க.குமரன்

ம.இ.கா என்றுமே சர்வாதிகார போக்கைக் கையாண்டதில்லை. தேசிய முன்னணிக்கு வலுசேர்க்கும் ஒரு கட்சியாகவே ம.இ.கா. என்றும் இருந்துள்ளது. தேசிய முன்னணியில் இணைய விரும்பும் எந்தக் கட்சிக்கும் ம.இ.கா. கதவடைப்பு செய்யாது; .நாங்கள் யாரையும் தடுக்க மாட்டோம். பிறகட்சிகள் தேசிய முன்னணியில் சேர இணக்கம் காணப்பட்டபோது ம.இ.கா.தான் தடுத்தது என்ற களங்கம் இனியும் எங்களுக்குத் தொடர வேண்டாம். யார் வேண்டுமானாலும் தேசிய முன்னணியில் இணையலாம். அதனை நாங்கள் வரவேற்போம் என்ற ம.இ.கா.தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் செய்தி இன்பத்தேனாக காதில் பாய்ந்ததாக தான்ஸ்ரீ குமரன் இன்று குறிப்பிட்டார்.

வராற்றுபூர்வமான இச்செய்திமூலம், ம.இ.கா.மீதிருந்த ச களங்கம் நீக்கப்பட்டிருப்பதுடன், தேசிய முன்னணியை ஆதரிக்கும் இந்தியர் கட்சிகள் ஒன்றிணைந்து புரிந்துணர்வுடன் செயல்படவும் வழி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாக ம.இ.கா.வின் எதிர்கால நிலைப்பாடு குறித்து கூறப்பட்ட பல ஆருடங்கள், ம.இ.கா.வின் இறுதி முடிவுகள் எப்போதும் தூரநோக்கு கொண்டவையாகத்தான் இருக்கும் என்பதனை இம்முடிவு காட்டுவதாக குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித் துள்ள அவர், அரசியலில் வெற்றி தோல்வி என்பது அன்றைய நாட்டு நிலைமை, மக்க ளின் விருப்பு, வெறுப்பு இவையே தேர்தல் முடிவாக அமைகின்றன.

தோல்வியைக் கண்டு துவண்ட வரலாறு ம.இ.கா.விற்கு இல்லை.1955-இல் அம்னோ ம.சீ.வுடன் கூட்டணி அமைத்து கூட்டரசு சட்ட மன்றத் தேர்தலிலும் 1959, 1964-ஆம் ஆண்டு-களில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்-றியை ஈட்டினாலும் 1969-ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளும், மே 13 இன கலகமும் , பாஸ், கெராக்கான், மமுக. மற்றும் சபா சரவாக் கட்சிகளையும் இணைத்து தேசிய முன்னணி உருவாக ம.இ.காவும் காரணமக இருந்தது என்று விவரித்த தான்ஸ்ரீ குமரன், பாஸ் கட்சி சில ஆண்டுகளில் வெளியேறியது என்றார்.

2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின் அம்னோ-மசீச-மஇகா-பிபிஆர்எஸ் தவிர மற்ற கட்சிகள் எங்கோ மறைந்தன.

அண்மையில் பிபிபி தன்னை மீண்டும் தேசிய முன்னணியில் இணைத்துக் கொண்டது.இந்த நிலையில் தேசிய முன்ன்ணியிலிருந்து ம.இ.கா. வெளியேறும் என்ற ஆரூடங்கள் மனதில் நெருடலை ஏற்படுத்தினாலும் கட்சித்தலைவரின் செய்தி மகிழ்ச்சியளிப்பதாக ம.இ.கா.வில் எழுபது ஆண்டுகளாக பயணிக்கும் மூத்தத்
தலைவரான டான்ஸ்ரீ க. குமரன் குறிப்பிட்-டார்.

இளைய தலைமுறை அரசியல்வாதிகளுக்-காக ம.இ.கா. வரலாற்றின் சில சுவடுகளை நினைவுறுத்தினார். நாடு சுதந்திரம் அடைந்தபின் பல அரசியல் கட்சிகள் தோன்றின. அவற்றில் இந்தியத் தலைவர்கள் பலரும் வலம் வந்தனர்.

இந்தியர்களின் நலன் குறித்து நாடாளும் மன்றம், சட்ட மன்றங்களில் குரல் எழுப்பினர். மறுப்பதகில்லை. அவர்கள் பருவகாலத் தலைவர்கள்.

ம.இ.கா. அப்படியல்ல; இரண்டாம் உலகப் போருக்குப்பின் வறுமையிலும், ஏழ்மையிலும், திக்கு தெரியாமல் தவித்த இந்தியர்களை அரவணைத்து, பாதுகாத்து அவர்களின் நலன்பேண தோற்றுவிக்கபெற்ற சமூக நல இயக்கம்.

நாட்டு நலனையும் சமூகத்தின் தேவையையும் கருதி, அரசியல் பாட்டையில் நடைபோட தொடங்கிய ம.இ.கா. பொதுத் தேர்தல்களில் வெற்றியுடன் தோல்வியை சந்தித்தாலும் அரசியல் வேறுபாடின்றி இந்தியர்கள் அனைவரும் மழையிலும் வெய்யிலிலும் தங்கிச்செல்லும் ஆலமரமாக மட்டுமல்லாது சமுதாய தேவையை நிறைவு செய்யும் அறச்சாலையாகவும் செயல்படுவது வரலாறு வெட்டிய வாய்க்கால். கைம்மாறு மருதாமல் சமுதாய நலன்பேணும் ம.இ.கா.தலைவர்களப் பாராட்டுவதுடன் தேசிய முன்னணியில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துவதாக டான்ஸ்ரீ குமரன் கூறினார்..

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை