
நீண்டகாலமாக எழுத்துத் துறையில் ஈடுபட்டி-ருப்பதோடு, எஸ்பிஎம், பிடி3, யூபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி நூல்களையும் கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கி வெளியிட்டு வரும் திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம் எழுதிய சிறுகதைகள் – கட்டுரைகள் – கவிதைகள் அடங்கிய ‘கதம்பம்’ தொகுப்பு நூலின் வெளி-யீட்டு விழா மஇகா தேசியத் துணைத் தலை-வரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரு-மான சொல்வேந்தர் டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் தலைமையில் நடைபெறுகிறது.
இன்று வியாழக்கிழமை ஏப்ரல் 23-ஆம் நாள் மாலை 5.30 மணி அளவில் இந்த நூல் வெளியீட்டு விழா, பிரிக்ஃபீல்ட்ஸ் பார்வை-யற்றோர் சங்க மண்டபத்தில் (Jalan Tebing, Off Jalan Tun Sambanthan 4, Brickfields, 50470 Kuala Lumpur) நடைபெறுகிறது.

புத்ரா பல்கலைக்கழக விரிவுரையாளரும் எழுத்தாளருமான முனைவர் ராஜேஷ் இராமசாமி வழிநடத்த இருக்கும் இந்த நிகழ்ச்சியில் மலாயாப் பல்கலைக்கழகத்-தின் முன்னாள் விரிவுரையாளரும் இணைப் பேராசிரியரும் மலேசிய ‘டிஸ்லெக்சியா’ இயக்கத்தின் தலைவருமான முனைவர் முல்லை இராமையா வழங்க இருக்கும் நூலாசிரியர் குறித்த அறிமுகமும் இடம்பெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளரும் கல்வியியலாளருமான கோபாலன் என்னும் தமிழரசு வழங்கும் நூல் அறிமுக உரையும் இடம் பெறவுள்ளன.

நூலாசிரியர் விக்னேஸ்வரியின் குடும்ப உறுப்பினர்கள் சார்பாக அவரின் புதல்வரும் திரைப்பட, தொலைக்காட்சித் தொடர் இயக்-குநரும் திரைக்கதை ஆசிரியருமான தீபன் எம்.விக்னேஷ் நன்றியுரை நிகழ்த்துவார்.
டத்தோஸ்ரீ மு.சரவணன் தலைமையுரை-யாற்றி, நூலை வெளியிட்டு சிறப்புச் செய்-வார்.
முதல் நூலை மஇகா பெட்டாலிங் ஜெயா தொகுதித் தலைவரும், மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ எஸ்.எம்.முத்து பெற்றுக் கொள்வார்.
தமிழ் இலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி ஏற்பாட்-டாளர்கள் அன்புடன் கேட்டுக் கொள்கின்ற-னர்.
தொடர்புக்கு: 012-3922497, 011-27106045


