Friday, May 1, 2026

ஈப்போவில் தொல்காப்பியர் பன்னாட்டு மாநாடு! -மல்லை சத்தியா உலகத் தமிழர்களுக்கு அழைப்பு!

மலேசிய நாட்டின் பேராக் மாநிலத்தின் தலைநகர் ஈப்போ நகரைத் தலைமை-யிடமாகக் கொண்டு இயங்கும் முத்தமிழ் பாவலர் மன்றத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு அதன் தலைவர் ‘கவிரத்னா’ பெருந்தமிழன் அருள் ஆறுமுகம் தலைமையில் 22 08 2026 சனிக்கிழமை, பன்னாட்டு தொல்காப்பியர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று திராவிட வெற்றிக் கழக தலைவர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழ்ச் சங்கங்கள் இலக்கிய சங்கங்கள் தமிழ் ஆர்வலர்கள் இணைப்பில் உள்ள எண்ணில் அழைத்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் தலைமுறை கோடிகண்ட தமிழின உணர்வைப் பட்டுப் போகாமல் பாதுகாப்-போம் என்றும் மல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க(ஆசியா)த் தலைவருமான மல்லை சி ஏ சத்யா தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை