Saturday, June 6, 2026

ஐயோ பாவம் பிபிசி-தந்தி டிவி!

விஜய் நாளை முதல்வர் பதவி ஏற்காததால் பரிதவிப்பு!!

சனாதன பாஜக-விற்கும் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக உருமாற்றும் மோடி-அமித் ஷா இரட்டையருக்கும் வால் பிடித்து செம்பு சுமக்கும் ஊடகங்களாக மாறிவிட்ட பிபிசி தமிழோசையும் தந்தி தொலைக்காட்சியும் இன்று காலை 11:30 மணி அளவில் முதல்வராக தவெக தலைவர் – நடிகர் விஜய் பதவியேற்க முடியாததாலும் அவருக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென்று விலக்கப்பட்டதாலும் கவலையில் ஆழ்ந்து மயக்கம் அடைந்து கிடக்கின்றன.

தமிழர்தம் இன – மொழி அடையாளங்கள் குறித்து அண்மைக் காலமாக கேள்வி எழுப்பி செய்தி வெளியிடுகின்ற பிபிசி தமிழோசை, பாரத தேசம் என்ற ஒன்று இருந்ததாக செய்தி வெளியிட்டது.

இந்தியாவிற்கே ஏறக்குறைய 300 ஆண்டு வரலாறு மட்டுமே இருக்கும் நிலையில் எந்த காலத்திலும் இல்லாத பாரத தேசத்தைப் செய்தி வெளியிட்டு ‘நம்பப்படுகிறது’, ‘கூறப்படுகிறது’ என்றெல்லாம் முட்டுக்கொடுத்து இட்டுக் கட்டிய செய்திகளை அண்மை ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழோசை.

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் காலமெல்லாம் திமுகவை வெறுக்கும் பிராமண பத்திரிகையாளர்களான கோலாகல சீனிவாசன் மாலன், சிறுநீர் கழிக்க மு.க.ஸ்டாலின் வேட்டியை மடித்துக் கட்டினால்கூட அதையும் குறை சொல்லுகின்ற பத்திரிகையாளர் மணி போன்றோரை செவ்வி கண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக அடைந்த தோல்விக்கு மேலும் காயம் ஏற்படும் விதமாக இது போன்றவர்களின் கருத்தை வெளியிட்டு வருகிறது.

நேற்றுகூட, என்னென்னவோ செய்திகளை வெளியிட்ட பிபிசி தமிழோசை, விஜய் பதவி ஏற்க முடியாத சூழலைப் பற்றியோ அவர் போலீஸ் வாகனம் இல்லாமல் திடீரென்று தனியாக வாகனத்தில் சென்றதைப் பற்றியோ எந்த தகவலும் வெளியிடவில்லை.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை